» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புதிய தொழில்நுட்ப முறையில் மாதிரி விண்கலம் : போப் கல்லூரி மாணவர்கள் அசத்தல்!

செவ்வாய் 13, மே 2025 5:09:31 PM (IST)



சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்கள் மாதிரி விண்கலம் மற்றும் செயற்கைக்கோள் முதற்கட்ட வடிவமைப்பை புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்துள்ளனர்.

சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் மாதிரி விண்கலம் மற்றும் செயற்கைகோள் முதற்கட்ட வடிவமைப்பை புதிய தொழில்நுட்ப முறையில் செய்துள்ளனர். இந்த மூன்றாவது மாநில அளவிலான சிம்போசியம் நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளர் நீதிஅரசர் ஜான் ஆர்.டி. சந்தோஷம் வழிகாட்டுதலின் பேரில் மற்றும் துணை பொறுப்பாளர் டாக்டர் ராமா தலைமையில் நடைபெற்றது. 

கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார். கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் மிக அருமையாக வடிவமைத்துள்ளனர் இந்த வகை புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய இறுதியாண்டு இயந்திரவியல் துறை மாணவர்கள் தினேஷ், கோகுல், முத்து செல்வம், ஏஞ்சல், விக்னேஷ், விக்ரம், சரவணகுமார், ஹரி, பிரபாகரன்,பொண்ணு தங்கம், சாதனை படைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் சுங்கத்துறை உதவி ஆணையர் திரு அழகேசன் மற்றும் பிளாக் ஸ்டோன் ஷிப்பிங் இயக்குனர் அலெக்ஸ் செல்வின் ராஜ்குமார் கலந்து கொண்டு மாணவர்களைக்கு வாழ்த்துரை கூறினார். 

இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் கட்டிட பொறியாளர் தீபக்ராஜ், கல்லூரி துறை தலைவர்கள் டாக்டர். விஜயலட்சுமி, செல்வரதி, டயலா, ஆனந்தி, டேவிட் ராஜா, இயந்திரவியல் துறை துணை பேராசிரியர்கள் , அலெக்ஸ்ராஜ், கனகராஜ், பிரைட்டன், எபநேசர், எட்வர்ட், மனுவேல் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டை இயந்திரவியல் துறை தலைவர் டென்னிசன் செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital

CSC Computer Education



Thoothukudi Business Directory