» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டாஸ்மார்க் கடையில் மது அருந்திய வாலிபருக்கு உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் அனுமதி
செவ்வாய் 13, மே 2025 4:58:36 PM (IST)
சாத்தான்குளம் அருகே டாஸ்மார்க் கடையில் காலாவதியான மதுவை வாங்கி குடித்ததால் வாலிபருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் டாஸ்மாக் கடையில் தேர்க்கன்குளத்தை சேர்ந்த உத்திரம் என்பவரின் மகன் இசக்கி (32) என்பவர் மது வாங்கி அருந்தியுள்ளார். மது அருந்திய சிறிது நேரத்தில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வயிறு வலி அதிகமாக இருந்த காரணத்தினால் உடனடியாக அவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
மேற்படி இசக்கி வாங்கி குடித்த மதுவானது காலாவதியானது என்றும், அதனால்தான் அவருக்கு வயிறு வலி ஏற்பட்டு உள்ளது என்றும் அங்கிருந்த மது பிரியர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது பேய்குளம் டாஸ்மார்க் கடையில் காவல்துறையினர் கெட்டுப்போன மது பாட்டில்கள் உள்ளதா என்று ஆய்வு செய்து வருகின்றனர். இது அப்பகுதி மது பிரியர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










