» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் உப்பளத்தில் கஞ்சா செடி வளர்ப்பு : 4பேர் கைது!
செவ்வாய் 13, மே 2025 11:12:34 AM (IST)

தூத்துக்குடியில் உப்பளத்தில் கஞ்சா செடிவளர்த்தது தொடர்பாக பீகார் மாநிலத்தை சேர்ந்த 4பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி சிப்காட் தொழிற்பேட்டை அருகே உள்ள உப்பளப் பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் நகர தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் சிப்காட் போலீசார் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.
அப்போது உப்பளப்பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிட்டு வளர்க்கப்பட்டு இருப்பதை கண்டறிந்தனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அங்கு தங்கி இருந்து வேலை செய்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் கஞ்சா செடியை வளர்த்து வந்தது தெரிய வந்தது,
இதனைத் தொடர்ந்து பீகார் மாநிலம் பரியப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனிஷ்சாக் (28), முனனா தேவன் (29), சதீஷ்குமார் (19), சமஸ்டிபூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிஜி அலி பஸ்வான் (29) ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 80 கிராம் கஞ்சா, கஞ்சாவை புகைக்கும் இரண்டு பைப், 40 பாக்கெட் ஸ்வாகத் போதை புகையிலை மற்றும் 4 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










