» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழாவில் சப்பர பவனி
செவ்வாய் 13, மே 2025 8:43:24 AM (IST)

சாத்தான்குளம் அருகே சிதம்பராபுரம் படைமிரட்டி புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழாவில் சப்பர பவனி நடைபெற்றது.
சாத்தான்குளம் அருகே சிதம்பராபுரம் படைமிரட்டி புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழா கடந்த 2ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெற்றது. முதல் நாளில் வள்ளியூர் சமூக நல்வாழ்வு இயக்குநர் ஜோ ரெக்ஸ் தலைமை வகித்து கொடியேற்றினார். கடக்குளம் ரியோசில் பெப்ரி மறையுரை, மன்னார்புரம் டென்சிங்ராஜா கொடி மந்திரிப்பு, சொக்கன்குடியிருப்பு ஜோசப் லியோன் நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றன.
நவநாளில் ஜெபமாலை, திருப்பலி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 9ஆம் நாள் காலை குரும்பூர் பங்குத்தந்தை பபிஸ்டன் தலைமையில் ஜெபமாலை, பிரார்த்தனை, திருப்பலி, மாலையில் தூத்துக்குடி முதன்மை குரு ஜோசப் ரவிபாலன் தலைமையில் ஆடம்பர மாலை ஆராதனை, காவல்கிணறு அருங்கொடை இயக்குநர் ஜார்ஜ் ஆலிபனின் மறையுரை, இரவில் புனிதரின் அலங்கார தேர் பவனி ஆகியவை நடைபெற்றன.
இந்நிலையில், 10ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை தூத்துக்குடி முன்னாள் ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் ஜூப்லி திருவிழா கூட்டுத் திருப்பலி, புதுநன்மை முழுக்கு நடைபெற்றது. மிட்டாதார்குளம் புதிய குரு எஸ்தாக் மறையுரை வழங்கினார். மாலையில் புனிதரின் சிறப்பு தேர் பவனி, நற்கருணை ஆசீர், கொடியிறக்கம் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று மாலை ஜெபமாலை, நற்கருணை ஆசீர், ஊர் அசனம் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆலயப் பங்குத்தந்தை இருதயசாமி தலைமையில் திருவிழா நிர்வாகக் குழு, இறைமக்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










