» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்ரா பௌர்ணமி விழா : திரளான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 13, மே 2025 8:33:40 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடியில் பிரசித்திபெற்ற, சிவன் கோவில் என்று அழைக்கப்படும் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு காலை 9 மணிக்கு கும்ப பூஜை. பூர்ணாகுதி. மற்றும் மாலை 5 மணிக்கு ஸ்ரீ அன்னை பாகம்பிரியாள் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதைத்தொடர்ந்து பௌர்ணமி பூஜை கமிட்டி சார்பில் 504 மாவிளக்கு பூஜை நடந்தது
இந்த பூஜையில் ஏராளமான சுமங்கலி பெண்கள் கலந்துகொண்டு பூஜை செய்தனர் பின்னர் அனைவருக்கும் மாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் பிரதான பட்டர் செல்வம் பௌர்ணமி பூஜை மாவிளக்கு கமிட்டி தலைவர் நெல்லையப்பன் செயலாளர் நடராஜன் மற்றும் நிர்வாகிகள் கல்யாணி. பொன்ராஜ். முத்துக்குமார். ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்
தெப்பக்குளம் மாரியம்மன்

தூத்துக்குடி அருள்மிகு தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி பூஜை நடந்தது இதை தொடர்ந்து மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ரத வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதே தொடர்ந்து 108 திருவிளக்கு பூஜை நடந்தது பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது
திருவிளக்கு பூஜையை கோவில் பட்டர்கள் சிவா மற்றும் குரு ஆகியோர் நடத்தினார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இளைஞர் அணி தலைவர் எ அறிவழகன், அறங்காவலர் குழு தலைவர் செல்வ சித்ரா, அறங்காவலர்கள் மகாராஜன், பால குருசாமி, திருவிளக்கு பூஜை கமிட்டி நிர்வாகிகள் பாலு நயினா, கோபால் மணிகண்டன் உள்பட ஏராளமானோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










