» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மே 20 அகில இந்திய பொது வேலை நிறுத்தம் வெற்றி பெற தொழிற்சங்கங்கள் ஆலோசனைக் கூட்டம்

திங்கள் 12, மே 2025 8:03:36 PM (IST)



மே 20 அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவது தொடர்பாக தூத்துக்குடியில் தொழிற்சங்கங்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. 

மத்திய அரசின் தொழிலாளர் விவசாய விரோத கொள்கைகளை கண்டித்தும், கைவிடக் கோரியும் மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள மே 20 அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் வெற்றிகரமாக்க தூத்துக்குடி மாவட்ட மத்திய தொழிற்சங்கங்களான சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, தொழிலாளர் முன்னேற்ற பேரவை, ஹெச் எம் எஸ், ஏ ஐ சி சி டி யு, ஆகிய சங்கங்களின் மாவட்ட தலைவர், செயலாளர்கள் பங்கேற்கும் அனைத்து தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஹெச்எம்எஸ் அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.

சிஐடியு சார்பில் இரா. பேச்சிமுதது, ஆர்.ரசல், அப்பாதுரை ஏஐடியுசி சார்பில் லோகநாதன் பாலசிங்கம், தொமுச சார்பில் சுசீ ரவீந்திரன், கருப்பசாமி, ஐஎன்டியுசி சார்பில் ராஜ், பாலகிருஷ்ணன், சுரேஷ் குமார, ஏஐசிசிடியு சார்பில் த.சிவராமன், சகாயம், ஹெச்எம்எஸ் சார்பில் ராஜலெட்சுமி, பெமினா , மற்றும் கிரேன் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் தலைவர் சுயம்புலிங்கம், சிம்பு கணேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மே 20 வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு கேட்டும், கடையடைப்பு செய்ய வலியுறுத்தியும் வணிகர் சங்கங்களின் தலைவர்கள், லாரி, டிப்பர், டிரைலர் லாரி உரிமையாளர்கள், விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவர்கள், தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள், உப்பு உற்பத்தியாளர்கள், விவசாய சங்கங்களின் தலைவர்கள், ஆகியோரை நாளை சந்தித்து வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கேட்டும், கடையடைப்பு செய்ய கேட்டும் அனைத்து தொழிற் சங்கங்களின் மாவட்டத் தலைவர்கள் தொமுச மாவட்டச் செயலாளர் சுசீ ரவிந்திரன் தலைமையில் சந்திக்க உள்ளனர்.

அதனை தொடர்ந்து மே 15-16 தேதிகளில் தூத்துக்குடி மாநகர் மற்றும் மத்திய பகுதிகளில் இரண்டு நாட்கள் துண்டு பிரசுர விநியோகம், தெருமுனைக் கூட்டங்கள் நடைபெறுகிறது. கோவில்பட்டியில் பாபு தலைமையிலும், எட்டயபுரத்தில் எஐடியுசி சேது தலைமையிலும், கயத்தாரில் சிஐடியு மாரியப்பன் தலைமையிலும், விளாத்திகுளத்தில் தொமுச மாரிமுத்து, புதியம்புத்தூரில் தொமுச தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் செல்வ பெருமாள், திருவைகுண்டம் சிஐடியு ரவி தாகூர், ஆழ்வார் திருநகரியில் ஏஐசிசிடியு முருகன் தலைமையிலும், சாத்தான்குளத்தில் ஏஐடியுசி கிருஷ்ணராஜ் ஆகியோர் தலைமையில் சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப் , ஐஎன்டியுசி, ஹெச் எம் எஸ், ஏஐசிசிடியு பகுதி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டு விரிவான பிரச்சார இயக்கம் நடத்தப்படும். மாவட்டம் முழுவதும் 50000 துண்டு பிரசுரங்களும் 2400 போஸ்டர்களும் வெளியிடப்படும். 60க்கும் மேற்பட்ட இடங்களில் தெருமுனை கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்கள் ஆதரவு கோரப்படும். 

மே 20 அன்று துறைமுகம் அனல் மின் நிலையம், மின் வாரியம், போக்குவரத்து கழகம், நூற்பாலைகள் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்வார்கள. மாநகராட்சி துப்புரவு தொழிலாளிகள், தீப்பட்டி ஆலை தொழிலாளிகள், முழுமையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் லாரிகள் ஆட்டோ வேன் டாக்ஸிகள் ஓடாது. வேலை நிறுத்தம் மேற்கொள்வதுடன் தூத்துக்குடி கோவில்பட்டி திருச்செந்தூர் ஆகிய மூன்று மையங்களில் 2000க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் மாவட்டம் முழுவதும்மறியல் போராட்டம் நடத்த உள்ளனர் மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education



Arputham Hospital




Thoothukudi Business Directory