» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீட்டில் பதுக்கிய 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் : வாலிபர் கைது
திங்கள் 12, மே 2025 9:05:32 AM (IST)
கோவில்பட்டியில் விற்பனைக்காக 1¼ கிலோ கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி- எட்டயபுரம் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மேகா தலைமையிலான போலீசார் எட்டயபுரம் ரோட்டில் குறிப்பிட்ட வீடு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள தனியார் இருசக்கர வாகன ஷோரூம் அருகே ஒரு வீட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆட்கள் நடமாட்டம் இருந்தது. உடனடியாக போலீசார் அந்த வீட்டை சுற்றிவளைத்தனர். வீட்டிற்கு போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அந்த வீட்டிற்குள் இருந்த சிலர் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
அந்த வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 1¼ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த வீட்டில் இருந்த வாலிபர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில், அவர் கோவில்பட்டி பாரதிநகர் மேட்டு தெருவை சேர்ந்த மூக்கையா மகன் மாரிச்செல்வம் (25) என்பதும், இவர் வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, எட்டயபுரம் ரோட்டில் உள்ள இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து, கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து மாரிசெல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










