» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு அளிக்கும் கட்சியுடன் கூட்டணி: புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி
திங்கள் 12, மே 2025 8:58:45 AM (IST)
"ஆட்சி, அதிகாரத்தில் பங்கு அளிக்கும் கட்சியுடன் கூட்டணி" என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.
கோவில்பட்டியில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாடு வருகிற டிசம்பர் மாத இறுதியில் மதுரையில் நடைபெறும். கடந்த 10 நாட்களில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 200 கிராமங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதில், உள்ளாட்சி அமைப்புகள் முறையாக செயல்படாத காரணத்தால் குடிநீர், தெருவிளக்கு, சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதில், தேவேந்திரகுல மக்கள் வாழும் பகுதிகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி நிதியை விடுவித்துள்ள நிலையில், அனைத்து கிராமங்களிலும் 100 நாள் வேலை திட்டம் மீண்டும் தொடங்கப்பட வேண்டும். இல்லையெனில் புதிய தமிழகம் சார்பில் போராட்டம் நடத்தப்படும். சமூக நீதிக்கும் இந்த ஆட்சியாளர்களுக்கும் சம்பந்தமே கிடையாது. தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டை மட்டுமே வைத்து சமூக நீதி பேசப்படுகிறது. ஆனால், 18 சதவீத தேவேந்திரகுல வேளாளர் சமூகத்துக்கான இடஒதுக்கீடு கொடுக்கப்படாமல் உள்ளது.
தேவேந்திரகுல வேளாளர், ஆதிதிராவிடர்களுக்கான இடஒதுக்கீட்டை அருந்ததியருக்கு தாரை வார்க்க கூடாது. அதற்கு இந்த அரசு உடந்தையாக இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி திருச்சியில் வருகிற 17-ந் தேதி ஆர்ப்பாட்டமும், பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம். சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்களிக்க கூடிய கட்சியுடன் புதிய தமிழகம் கூட்டணி அமைக்கும், என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










