» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூரில் 50 அடிக்கு கடல் உள்வாங்கியது!
திங்கள் 12, மே 2025 8:39:56 AM (IST)
திருச்செந்தூர் கோவில் அருகே கடல்நீர் சுமார் 50 அடி தூரத்திற்கு உள்வாங்கி காணப்பட்டது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நேற்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. பின்னர் 10.30 மணிக்கு உச்சி கால அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. மாலையில் சாயரட்சை தீபாரதனை நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.
சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பள்ளி தொடர் விடுமுறை என்பதாலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும் திரளான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி சுமார் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே கடல்நீர் அமாவாசை, பௌர்ணமி நாள்களில் கடல்நீர் உள்வாங்குவதும் பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்புவதும் அண்மைக்காலமாக தொடர்ந்து நிகழ்கிறது. இந்த நிலைியல் நேற்று, சுமார் 50 அடிக்கு கடல்நீர் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாசி படர்ந்த பாறைகள். எனினும், பக்தர்கள் வழக்கம்போல நீராடினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










