» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி: அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் ஸ்ட்ரைக் தொடர்கிறது!
ஞாயிறு 11, மே 2025 9:51:20 AM (IST)
தூத்துக்குடியில் 8ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில் என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் இன்று 24வது நாளாக தொடர்கிறது.
தூத்துக்குடி தெர்மல் நகரில் மத்திய அரசின்கீழ் செயல்படும் இந்த அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு, நெய்வேலி என்எல்சியில் வழங்குவது போன்று ஊதியம் வழங்க வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கிலும் இவர்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்தது.
ஆனால், என்டிபிஎல் நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது. இதைக் கண்டித்தும், ஊதிய உயர்வு கோரியும் கடந்த ஏப். 18 முதல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்திலும், அனல் மின்நிலையம் முன் குடும்பத்துடன் தர்னாவிலும் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தால் அனல்மின் நிலையத்தில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் தொடர்பாக நிர்வாகத்தின் மேலாண்மை நிர்வாக இயக்குநர் வாஞ்சிநாதன், தலைமைப் பொது மேலாளர் பங்கஜ்குமார், தலைமை செயல் இயக்குநர் அனந்தராமானுஜம், தொழிற்சங்கம் சார்பில் சிஐடியூ மாநிலப் பொதுச் செயலர் ராஜேந்திரன், மாநிலச் செயலர் ஆர். ரசல், மின் ஊழியர் மத்திய அமைப்பு என்டிபிஎல் அனல் மின் நிலையச் செயலர் எஸ். அப்பாத்துரை உள்ளிட்ட நிர்வாகிகளுடன் நேற்று நடைபெற்ற 8ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இப்போராட்டம் இன்று 24வது நாளாக தொடர்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










