» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம் : அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம்!

ஞாயிறு 11, மே 2025 9:42:22 AM (IST)

இந்தியாவில் 9.69 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என அமைச்சர் பெ.கீதா ஜீவன் தெரிவித்தார். 

தூத்துக்குடியில் தமிழ்நாடு உணவு பதப்படுத்துவோர் சிறப்பு மாநாட்டை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: உணவு பதப்படுத்தும் துறையில் புதிய தொழில்முனைவோர் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும். இது 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும். இந்தியாவில் 9.69 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. 

மேலும் உணவு பதப்படுத்தும் துறை இந்த பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய உந்துதலாகும். தூத்துக்குடி போன்ற நகரங்கள் முழுமையான வளர்ச்சிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னுரிமை அளித்துவருகிறார். உணவு பதப்படுத்துதல் மற்றும் குளிர்பதன சங்கிலி உள்கட்டமைப்பு மூலம் பதநீர், பனங்கல்கண்டு போன்ற உள்நாட்டு தயாரிப்புகளை ஆரோக்கியமான முறையில் மேம்படுத்துவதற்கான தேவை உள்ளது என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory