» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத் தூய யோவான் பேராலயதில் 97வது பிரதிஷ்டை: அசன பெருவிழா!

ஞாயிறு 11, மே 2025 9:24:08 AM (IST)



தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம் நாசரேத் தூய யோவான் பேராலயத்தின் 97 வது பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை விழா கடந்த 4 ம் தேதிதொடங்கி 7 நாட்கள் நடந்தது .

முதல் நாள் மாலை 7.30 மணிக்கு நெல்லை வாழ் நாசரேத் வட்டார மக்கள் ஐக்கியம் சார்பில் விஷ்வவாணி மிஷனெரி கலை நிகழ்ச்சிகள் நடந்தது.2 வது நாள் மாலை 7.30 மணிக்கு ஆண்கள் ஐக்கிய சங்கம் சார்பில் பஜனை பிரசங்கம் நிகழ்ச்சி நடந்தது.வள்ளியூர் தேவதாசன் பஜனை நடத்தினார்.3 வது நாள் மாலை 7.30 மணிக்கு வாலிபர் ஐக்கிய சங்கம் சார்பில் முன்னாள் ஜான்ஸ் கல்லூரி முதல்வர் ஜாண் கென்னடி குழுவினரின் பட்டி மன்றம் நடந்தது. 4 வது நாள் மாலை 7.30 மணிக்கு நாசரேத் சொர்க்க வாசல் ஜெபக்குழு சார்பில் பேராயர் இராபர்ட் கால்டுவெல் வாழ்க்கை வரலாறு குறித்த ஒலி,ஒளி நாடகம் நடந்தது.

5 வது நாள் மாலை 7.30 மணிக்கு சென்னை வாழ் நாசரேத் மக்கள் சங்கம் சார்பில் ஹெலன் சத்யா குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.6 வது நாள் காலை 9.30 மணி முதல் 2 மணி வரை குடும்ப உபவாச கூடுகை நடந்தது .சென்னை அள்ளித்தூவும் விதைகள் ஊழிய நிறுவனர் ரூபன் திலகராஜ் சிறப்பு செய்தி கொடுத்தார். இதனை தொடர்ந்து மாலை 3 மணிக்கு பேராலய வாலிபர் ஐக்கிய சங்க விளையாட்டு போட்டிகள் நடந்தது. அன்று மாலை 6.30 மணிக்கு பிரதிஷ்டை விழிப்பாராதனை நடந்தது. 

ஆராதனையில் பாடகர் குழுவின் சிறப்பு பாடல்கள் இடம்பெற்றன. தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பேராயர் (பொறுப்பு) செல்லையா சிறப்பு செய்தி கொடுத்தார். 7வது நாளான சனிக்கிழமை காலை 3.30 மணிக்கு பிரதிஷ்டை அசன பண்டிகை மற்றும் திருவிருந்து ஆராதனை நடந்தது மாலை 4 மணிக்கு அசன வைபவம் நிகழ்ச்சி நடந்தது. பேராலய தலைமை குரு ஹென்றி ஜீவானந்தம் ஜெபித்து அசன விருந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் திரளான பேர்களுக்கு அசன விருந்து வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை நாசரேத் தூய யோவான் பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம், தலைமையில் உதவி குருவானவர் பொன்செல்வின் அசோக்குமார், தூய யோவான் பேராலய அசன கமிட்டி தலைவர் செல்வின் ஜெபக்குமார், உப தலைவர் மர்காஷிஸ் தேவதாஸ், செயலாளர் ஆனந்தராஜ், இணைச்செயலாளர் இளவரசன், பொருளாளர் லேவி அசோக் சுந்தரராஜ், சபை ஊழியர்கள் ஜெபராஜ், ஜெசு மற்றும் அசன கமிட்டிஅலெக்ஸ்.ரஞ்சன் மற்றும் அனைத்து உறுப்பினர்கள், சபை மக்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education



Arputham Hospital




Thoothukudi Business Directory