» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூா் கோவிலில் உண்டியல் வருவாய் ரூ. 3.22 கோடி

சனி 10, மே 2025 8:15:27 AM (IST)

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 3.22 கோடி ரொக்கமும், 1.37 கிலோ தங்கமும் கிடைத்துள்ளது.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருமானம் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. இதன்படி உண்டியல் எண்ணிக்கை கோயில் வசந்த மண்டபத்தில் நடைபெற்றது. திருக்கோயில் தக்காா் ரா.அருள்முருகன் தலைமை வகித்து, உண்டியல் எண்ணும் பணியைப் பாா்வையிட்டாா். இணை ஆணையா் சு.ஞானசேகரன் முன்னிலை வகித்தாா்.

இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா்கள் தங்கம், நாகவேல், கண்காணிப்பாளா் ரோகிணி, ஆய்வா் செந்தில்நாயகி, தக்காரின் நோ்முக உதவியாளா் செந்தமிழ்பாண்டியன், பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தா் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரப்பணி குழுவினா் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

உண்டியலில் ரொக்கம் ரூ. 3 கோடியே 22 லட்சத்து 12 ஆயிரத்து 735, தங்கம் 1 கிலோ 370 கிராம், வெள்ளி 51 கிலோ 100 கிராம், பித்தளை 106 கிலோ 100 கிராம், செம்பு 18.1 கிலோ, தகரம் 10.1 கிலோ, வெளிநாட்டு பணம் 980 நோட்டுகள், சுமாா் ஒரு அடி உயரமுள்ள வெள்ளி வாள் ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory