» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நடுத்தர மக்களின் நண்பனாக திகழும் எஸ்.இ.டி.சி பேருந்து : சலுகைகள் பட்டியல்

வெள்ளி 9, மே 2025 10:49:41 AM (IST)



நடுத்தர மக்களின் நண்பனாக திகழும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் மாணவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், உள்ளிட்ட பொதுமக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. 

ஹால்டிக்கெட்: முதல் 12 வரையிலான குழந்தைகள் அரை (1/2) கட்டணத்திற்கு தகுதியானவர்கள். 130 செ.மீ உயரத்திற்கு மேல் உள்ள குழந்தைகள் பயணத்தின்போது அசல் வயது சான்றிதழ் நடத்துனரிடம் காண்பிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் முழு கட்டணம் வசூலிக்கப்படும். 

மூத்த குடிமக்கள்: மூத்த குடிமக்கள் (60 வயதுக்கு மேல் 10% கட்டண சலுகை கிடைக்கும்) பயணசீட்டு முன்பதிவு மையத்தில் புகைப்பட அடையாள அட்டை வயது சான்று (அரசு வழங்கியது) நகலை ஒப்படைக்க வேண்டும். பேருந்து நடத்துனரிடம் அசல் சான்று காண்பிக்கப்பட வேண்டும். 

மாற்றுத்திறனாளிகள்: மாற்று திறனாளிகள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்கள் பயணசீட்டு முன்பதிவு செய்யும் போது தங்களது அடையாத அட்டை சான்றிதழின் (அரசு வழங்கியது) ஒரு நகலை முன்பதிவு மையத்தில் ஒப்படைக்க வேண்டும். அசல் சான்றிதழை பேருந்து நடத்துனரிடம் காண்பிக்க வேண்டும். (25% மட்டும் வசூலிக்கப்படும்). 

குரூப் டிக்கெட்: குரூப் டிக்கட் பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 நபருக்கு மேல் முன்பதிவு செய்யும்போது 10% கட்டண சலுகை கிடைக்கும். மேலும் இச்சலுகை பண்டிகை காலங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை கிடையாது. 

முன்பதிவு செய்த பயணிகளுக்கு பேருந்து புறப்படுவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு நடத்துனரின் கைபேசி எண் மற்றும் பேருந்தின் பதிவு எண் ஆகிய விபரங்கள் தங்களின் கைபேசிக்கு (Mobile SMS) குறுஞ்செய்தியாக வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital


CSC Computer Education






Thoothukudi Business Directory