» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண் குழந்தை கழுத்தை நெரித்து கொடூர கொலை : போலீசார் விசாரணை
வெள்ளி 9, மே 2025 8:24:57 AM (IST)
திருச்செந்தூரில் 2¾ வயது பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள குமாரபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி (38). இவர் வெல்டிங் பட்டறை வைத்துள்ளார். இவரது மனைவி பார்வதி. இவர்களுக்கு ஸ்ரீதேவ்(8), இரண்டே முக்கால் வயது பெண் குழந்தை ஆதிரா ஆகியோர் உள்ளனர். பள்ளி விடுமுறை என்பதால் ஸ்ரீதேவ் முக்காணியில் உள்ள தாத்தாவின் வீட்டில் உள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை பார்வதி தனது மகள் ஆதிராவுடன் வீட்டில் இருந்தபோது, மர்ம நபர் வீட்டிற்குள் நுழைந்து, பார்வதியிடம் நகை பறிக்கும் முயற்சியில் குழந்தை ஆதிராவின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டாராம். இதுகுறித்து தகவல் அறிந்து திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார், தாலுகா காவல் ஆய்வாளர் இன்னோஸ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










