» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முதியவரிடம் ரூ. 40.22 லட்சம் மோசடி: மேலும் 4 பேர் கைது
வெள்ளி 9, மே 2025 8:15:14 AM (IST)
தூத்துக்குடியில் செல்போன் டவர் அமைத்து அதிக வருவாய் ஈட்டலாம் எனக் கூறி ரூ.40.22 லட்சம் மோசடி செய்தது தொடர்பான வழக்கில், மேலும் 4 பேரை சைபர் குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த முதியவரிடம், செல்போன் டவர் அமைத்து அதிக வருவாய் ஈட்டலாம் எனக் கூறி, ரூ. 40 லட்சத்து 21 ஆயிரத்து 950 பணத்தை மோசடி செய்தது தொடர்பாக தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் சென்னையைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் தர்மபுரி தோழனூர் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் அருண்குமார் (27), விழுப்புரம் கொளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜவேல் மகன் ஆனந்த் (27), சேலம் பனங்காட்டூர் பகுதியைச் சேர்ந்த ஹரிராம் மகன் சந்தோஷ்ராஜ் (22), கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த கேசவன் மகன் அப்பாஸ் (25) ஆகிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










