» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா: பச்சை சாத்தி சுவாமி, அம்பாள் ரதவீதி உலா!
வியாழன் 8, மே 2025 3:31:36 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழாவின் 8ஆம் நாளான இன்று பச்சை சாத்தி பித்தளை சப்பரத்தில் சுவாமி, அம்பாள் ரதவீதி உலா நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் சித்திரைத் திருவிழா மே 1ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 8ஆம் நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 9.00 மணிக்கு தெப்பக்குளம் அருள்மிகு சுந்தரபாண்டிய விநாயகர் திருக்கோயில் மண்டபத்திலிருந்து நடராஜப்பெருமானுக்கு பச்சை சாத்தி பித்தளை சப்பரத்தில் ரதவீதி உலா நடந்தது.
பகல் 1.35 மணிக்கு ஸ்ரீ நடராஜப் பெருமான் கோயிலில் நடன சேவையுடன் சேர்க்கை பெற்று, பிற்பகல் 2.00 மணிக்கு சுவாமி, அம்பாள் பல்லக்கில் ரதவீதி உலா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து காெண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7.00 மணிக்கு அருள்மிகு கங்காளநாதர் ரதவீதி உலா, 8.00 மணிக்கு சுவாமி குதிரை வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் ரத வீதி உலா நடக்கதிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம் : வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:00:19 PM (IST)

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)










