» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சித்திரைத் திருவிழா தேரோட்டம்: ரத வீதிகளை தூய்மைப்படுத்தும் பணி துவக்கம்!

வியாழன் 8, மே 2025 11:39:01 AM (IST)



தூத்துக்குடி சிவன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு ரத வீதிகளை தூய்மைப்படுத்தும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார். 

தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும் சித்திரைத் திருவிழா மே 1ஆம் தேதி காலை  கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 10ம் தேதி நடைபெற உள்ளது. 

இந்த நிலையில், தேரோட்டத்தை முன்னிட்டு ரத வீதிகள் மற்றும் கோயிலை சுற்றி உள்ள பகுதிகளையும் தூய்மைப்படுத்தும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் திமுக வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

Tamilanமே 8, 2025 - 01:50:26 PM | Posted IP 162.1*****

Vilambaram pannamal... therotta veethigalai seppanitu therotathirku thayar paduthavum. Melum therottathirku varum bakthargaluku adippadai vasathigalai murayaga seyyavum.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா

வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital


CSC Computer Education






Thoothukudi Business Directory