» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிளஸ் 2 தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் 96.19% பேர் தேர்ச்சி : மாநில அளவில் 9வது இடம்

வியாழன் 8, மே 2025 10:11:42 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.19 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 9வது இடம் பிடித்துள்ளது. 

தூத்துக்குடியில், 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் து. கணேசன் மூர்த்தி கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில்   மாணவர்கள், 8,741 மாணவிகள் என 10.501 பேர் தேர்வு எழுதினர். மொத்தம் 19,242 தேர்வு எழுதினர். இதில் 8,229மாணவர்கள் 10,280 மாணவிகள் என மொத்தம் 18,509 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

94.14 சதவீதம் மாணவர்கள், 97.90 சதவீதம் மாணவிகள் என மொத்தம் 96.19 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 9வது இடம் பிடித்துள்ளனர் என்று தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்டம் கடந்த ஆண்டு 96. 39சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 9வது இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 57 அரசு பள்ளிகளில் 15 பள்ளிகள் 100சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும் மாவட்டத்தில் உள்ள 206 பள்ளிகளில் 80 சதவிதம் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா

வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory