» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தபால்களை தீவைத்து எரித்த அஞ்சலக ஊழியர் கைது
வியாழன் 8, மே 2025 8:37:26 AM (IST)
கழுகுமலையில் தபால்களை குப்பையில் வீசி தீவைத்து எரித்ததாக தற்காலிக அஞ்சலக பணியாளரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை-கோவில்பட்டி சாலையில் காளவாசல் பேருந்து நிறுத்தம் அருகே தபால்கள் குப்பையில் வீசி தீயிட்டு எரிந்த நிலையில் இருப்பதை அறிந்த கழுகுமலை துணை அஞ்சல் அதிகாரி பால்ராஜப்பா இம்மாதம் 2ஆம் தேதி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் மற்றும் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து துறை சார்பில் நடைபெற்ற விசாரணையில், அஞ்சலகத்தில் தற்காலிக அஞ்சலக பணியாளராக பணியாற்றி வரும் முத்தையன் சேர்வை தெருவை சேர்ந்த மா. பாலசுப்பிரமணியன், தபால்களை குப்பை கிடங்கில் வீசியதும், தீயிட்டு எரித்ததும் தெரியவந்தது. இதுகுறித்து துணை அஞ்சலக அதிகாரி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து பாலசுப்பிரமணியனை நேற்று கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம் : வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:00:19 PM (IST)

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)










