» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சிவன் கோவில் அருகில் கோடி லிங்க தரிசனம் : பக்தர்கள் பரவசம்!
புதன் 7, மே 2025 11:47:26 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோவில் அருகே கோடி லிங்க தரிசனம் நடைபெற்றது வருகிறது.
தூத்துக்குடி சிவன் கோவிலில் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் சித்திரை பெரும் திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது வருகிற 10-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு சிவன் கோவில் அருகில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபம் நுழைவு வாயிலில் பிரஜாபிதா பிரம்மா ஐஸ்வர்யா விஷ்வ வித்யாலயம் சார்பில் கோடிலிங்க தரிசனம் நடைபெற்றது.
இதில், கோடிலிங்கம் தரிசனம் கோபுர புண்ணியம் என்ற வாசத்துடன் சிவபெருமானுக்கு நந்தீஸ்வரர் பன்னீர் அபிஷேகம் செய்வது போல் முன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே சிவலிங்கம் வண்ணமிகு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஒரே சிவலிங்கத்தில் கோடி சிவலிங்கத்தை பார்ப்பது போல் அமைக்கப்பட்டு இருப்பது பக்தர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதனை திரளான பக்தர்கள் வரிசையில் நின்று சிவபெருமானை தரிசனம் செய்து வருகின்றனர்.

இது குறித்து ஆன்மீக தென்றல் பிகே கலைச்செல்வன் காசிராஜன் கூறும் போது "தூத்துக்குடி திருச்செந்தூர் ரோடு ராஜபாண்டி நகரில் பிரம்ம குமாரிகள் கிளை ஆன்மீக மியூசியம் உள்ளது. இங்கு கடந்த சில ஆண்டுகளாக 12 கோபுர தரிசனம் சொக்கர் மீனாட்சி உடன் காட்சி கொடுக்கும் தரிசனம் குபேர தரிசனம் சிவலிங்க தரிசனம் உள்பட 12 தரிசனங்கள் பக்தர்கள் காணுவதற்கு வசதியாக வைக்கப்பட்டுள்ளது. தினசரி மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். மேலும் திருவிழா காலங்களில் அனைத்து கோவில்களிலும் இது போல் அமைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்" என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம் : வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:00:19 PM (IST)

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)










