» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தொட்டிலில் ஊஞ்சலாடிய சிறுமி கழுத்து இறுகி பலி
புதன் 7, மே 2025 8:40:57 AM (IST)
விளாத்திகுளம் அருகே வீட்டில் தொட்டில் சேலையில் ஊஞ்சலாடிய போது எதிர்பாரத விதமாக கழுத்து இறுகியதால் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள கே.குமாரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்துராஜ். இவரது 2-வது மகள் ஹேமமாலினி (14). இவர், விளாத்திகுளத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது கே.குமாரபுரத்தில் கோவில் திருவிழா நடைபெற்று வருவதால், நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள அனைவரும் கும்மி அடிக்கும் பயிற்சிக்காக கோவிலுக்கு சென்றுள்ளனர். இதனால் ஹேமமாலினி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்பாேது வீட்டில் சேலையை வைத்து கட்டப்பட்டிருந்த தொட்டிலில் அமர்ந்தவாறு அவர் ஊஞ்சலாடி கொண்டிருந்துள்ளார். எதிர்பாராத விதமாக அவரது கழுத்து சேலையில் சிக்கியதாக கூறப்படுகிறது.
வீட்டில் யாரும் இல்லாததால், அந்த சிக்கலில் இருந்து அவரை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த சேலையின் சிக்கலில் இருந்து மீள முடியாத அவர் கழுத்து இறுகி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கோவிலில் இருந்து குடும்பத்தினர் வீடு திரும்பிய போது, ஊஞ்சலில் சேலை கழுத்து இறுக்கிய நிலையில் அவர் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இதுகுறித்து விளாத்திகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ வீட்டிற்கு சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம் : வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:00:19 PM (IST)

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)










