» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 650 மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் : அமைச்சர் பி. கீதா ஜீவன் வழங்கினார்
புதன் 7, மே 2025 8:26:58 AM (IST)

தூத்துக்குடியில் 650 மீனவர்களுக்கு மீன்பிடித் தடைக்கால நலத்திட்ட உதவிகளை சமூக நலன்-மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் வழங்கினார்.
கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஜூன் 14 வரை மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களுக்கு முதல் கட்டமாக நலத்திட்ட உதவி வழங்கப்பட்டன. இந்நிலையில், விடுபட்டோருக்கான நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் நடைபெற்றது. அமைச்சர் பி. கீதா ஜீவன் பங்கேற்று 650 பேருக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ. 6 ஆயிரத்திலிருந்து ரூ.8 ஆயிரமாக திமுக ஆட்சியில் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை தடைக்காலத்துக்குள் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று, விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 2026 தேர்தலில் திமுக வெற்றிபெற அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் திமுக மாநகர செயலர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநில திமுக மீனவரணி துணைச் செயலர் புளோரன்ஸ், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், துணை அமைப்பாளர் ஜேசையா, மாமன்ற உறுப்பினர்கள் ரெக்ஸ்லின், விஜயகுமார், பெருமாள் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார், விசைப்படகு சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், மீனவர்கள் பங்கேற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம் : வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:00:19 PM (IST)

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)










