» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூா் கடலில் நீராடிய சரித்திர பதிவேடு குற்றவாளி கைது!
புதன் 7, மே 2025 8:20:41 AM (IST)
திருச்செந்தூா் கோயில் கடலில் குளித்து கொண்டிருந்த சரித்திர பதிவேடு குற்றவாளியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை கீழக்கூட்டுடன் காடு பகுதியைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டி (31). இவா் மீது தூத்துக்குடி, சிப்காட் காவல் நிலையத்தில் 2 கொலை வழக்குகள், சென்னை செங்குன்றத்தில் ஒரு கொலை வழக்கு, புதுக்கோட்டை காவல் நிலையத்தில் கஞ்சா மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. சரித்திர பதிவேடு குற்றவாளியான முத்துப்பாண்டியை போலீசார் தேடி வந்தனா்.
இதனால் முத்துபாண்டி மொட்டை அடித்து அடையாளம் தெரியாத அளவில் சுற்றித் திரிந்துள்ளாா். இந்நிலையில் திருச்செந்தூா் சுப்பிரமணிய கோயிலுக்கு முத்துப்பாண்டி நேற்று முன்தினம் குடும்பத்துடன் வந்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கடலில் குளித்துவிட்டு வெளியே வந்த முத்துப்பாண்டியை கோயில் காவல் நிலைய போலீசார் பிடித்தனா். அப்போது முத்துப்பாண்டியுடன் வந்த குடும்பத்தினா் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, முத்துப்பாண்டியை போலீசார் கோயில் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
பின்னர் அவரை கைது செய்து புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து ெசன்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடிக் கொண்டிருந்தபோது முத்துப்பாண்டியை போலீசார் கைது செய்து அழைத்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம் : வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:00:19 PM (IST)

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)










