» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் கணினி துறை தேசிய கருத்தரங்கு!

செவ்வாய் 6, மே 2025 3:29:01 PM (IST)



நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் ஒருநாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி கணினி அறிவியல் துறை சார்பில் தேசிய ஒருநாள் கருத்தரங்கு கல்லூரி கலையரங்கில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆரம்பமாக கல்லூரி கணினி துறை பாடகர் குழுவினர் பிரார்த்தனை பாடல் பாடினர். பேராசிரியை பிரின்ஸ்சஸ் பாலா வேதபாடம் வாசித்தார். பேராசிரியை ரெஜினா எலிசபெத் ஆரம்ப ஜெபம் செய்தார். தொடர்ந்து கணினி துறைத் தலைவர் முனைவர் ஜி. ஜெமில்டா அனைவரையும் வரவேற்றார்.

தேசிய கருத்தரங்கி ற்கு கல்லூரி முதல்வர் எஸ். ஜெயக்குமார் தலைமை தாங்கி உரையாற்றினார். பேராசிரியை கே. எமிலி எஸ்தர்ராணி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். இக்கருத்தரங்கில் அண்ணா பல்கலைக்கழகம் உறுப்பு கல்லூரியான தூத்துக்குடி வ.உ.சி. பொறியியல் கல்லூரியின் உதவி பேராசிரியை முனைவர் எஸ். சுமதி கலந்து கொண்டு "நுண்ணறிவு கணினி மற்றும் தொடர்பு தொழில்நுட்பம்" என்ற தலைப்பில் பேசினார். அதைத் தொடர்ந்து பேராசிரியை பிரேமா கருத்தரங்கின் அறிக்கையை வாசித்தார். 

பேராசிரியை ஷீலா நிறைவு ஜெபம் செய்தார். நிறைவாக பேராசிரியர் எட்வின் டாஸ் நன்றியுரை ஆற்றினார்.இக் கருத்தரங்கில் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி கணினி துறை பேராசிரியர்கள் சத்தியராஜ், பமீலா ரேச்சல், சுகன்யா, சாரோன் ஜெனிஸ் உட்பட தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். இம் மாநாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory