» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நடப்போம் நலம்பெறுவோம் விழிப்புணா்வு நடைபயிற்சி: மேயர் ஜெகன் பொியசாமி பங்கேற்பு

ஞாயிறு 4, மே 2025 9:01:26 PM (IST)



தூத்துக்குடியில், தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் நடப்போம் நலம்பெறுவோம் விழிப்புணர்வு நடைபயிற்சி நடைபெற்றது.

தூத்துக்குடியில் முத்துநகா் கடற்கரையிலிருந்து மேயர் ஜெகன் பொியசாமி தலைமையில் மருத்துவதுறை மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மாநகராட்சி சுகாதார துறை பணியாளா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் முத்துநகா் கடற்கரையிலிருந்து நடைபயணமாக கடற்கரை சாலை, மாதா கோவில், விளையாட்டு மைதானம், தெற்கு காட்டன்ரோடு, வஉசி சாலை, விஇ சாலை, காய்கனிமாா்க்கெட் அண்ணாசிலை, புதிய மாநகராட்சி, பழைய பஸ்ஸ்டாண்ட, வஉசி சாலை, டபிள்யுஜி சாலை, பழைய மாநகராட்சி வழியாக மீண்டும் கடற்கரை சாலை வழியாக முத்துநகா் கடற்கரையை சென்றடைந்தது. 

8.6 கிலோமீட்டர் நடைபயணமாக மேற்கொண்டது குறித்து மேயர் ஜெகன் பொியசாமி கூறுகையில் "ஏற்கனவே தமிழக அரசின் சாா்பில் ரோச்பூங்கா கடற்கரை சாலை முழுமையாக தூய்மையான பகுதியாக தேர்வு செய்யப்பட்டு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அதை தொடங்கி வைத்து நடைபயணம் மேற்கொண்டாா். 

இந்நிலையில் மாநகராட்சி சாா்பில் சிறுவா்கள் முதல் முதியவா்கள் வரை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் ஓவ்வொரு மனிதருக்கும் உடல் ஆரோக்கியம் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு மாநகராட்சி பகுதியில் இருந்த பழைய பூங்காக்கள் முடிந்த வரை விாிவுப்படுத்தி விளையாட்டு நடைபயிற்சி உருவாக்கி கொடுத்துள்ளோம் புதிதாக அமைக்கப்படுகின்ற பூங்காக்களில் கைப்பந்துகால்பந்து பூப்பந்து என பல்வேறு உடற்பயிற்சியுடன் கூடிய நடைபயிற்சி கட்டமைப்புகளை 60 வார்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயனடையும் வகையில் செய்து கொடுத்து வருகிறோம் அதே நேரத்தில் பெண்களுக்கு என்று தனியாக நான்கு மண்டலத்திலும் பூங்காக்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. மேற்கு மண்டலத்தில் திறக்கப்பட்டு வஉசி கல்லூாி அருகில் நல்ல பராமாிப்புடன் பெண்கள் கவனித்து வருகின்றன. 

இந்நிலையில் எல்லோரும் நலம் பெற வேண்டும் ஆரோக்கியம் மேம்பட வேண்டும் என்ற விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நடைபயிற்சியை மேற்கொண்டு எதிர்கால தலைமுறையினர் பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில் நடைபெற்றுள்ளது. அனைத்து தரப்பினரும் தங்களது பகுதியில் உள்ள பூங்காக்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். என்று கூறினாா்.

மக்களை தேடி மருத்துவம் மாநகராட்சி சுகாதாரதுறை இணைந்து மாநகாின் பல பகுதிகளில் பொதுமக்கள் நலன் கருதி பிரஸா், ரத்தபாிசோதனை, முகாம் நடைபெற்றது. பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பலனடைந்தனா். 

நடைபயிற்சியில் மாவட்ட சுகாதார அலுவலா் டாக்டர் யாழினி, மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமாா், நகா்நல அலுவலர் சரோஜா, கவுன்சிலர்கள் இசக்கிராஜா, சந்திரபோஸ், சுகாதார ஆய்வாளா் வில்சன், முன்னாள் மாவட்ட அரசு ஊழியா் சங்க செயலாளர் வெங்கடேஷ், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல், மின்வாாிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, வட்டச்செயலாளர் ரவீந்திரன், முன்னாள் மாநகர விவசாய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், முன்னாள் கவுன்சிலர் பொியசாமி, மேயாின் நோ்முகஉதவியாளர் ரமேஷ், ஆணையாின் நோ்்முக உதவியாளர் துரைமணி, உள்பட பலர் கலந்து கொண்டனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education



Arputham Hospital




Thoothukudi Business Directory