» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ரகளையில் ஈடுபட்ட 4பேர் கைது : ஆயுதங்கள் பறிமுதல்!
ஞாயிறு 27, ஏப்ரல் 2025 1:31:09 PM (IST)
தூத்துக்குடியில், பயங்கர ஆயுதங்களுடன் ரகளை செய்த 4பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து வாள், அரிவாள் போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சங்கலிங்கம் தலைமையிலான போலீசார் வடக்கு சோட்டையன்தோப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 4 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் கோவில்பிள்ளை விளையைச் சேர்ந்த வெற்றிவேல் மகன் இசக்கி ராஜா (33), கலைஞர் நகர் முனியசாமி மகன் சிவலிங்கம் என்ற சிவா (22), மட்டக்கடை ஜெகன் மகன் அல்டிரின் (20), சமர் வியாஸ் நகரை சேர்ந்த ஆல்பர்ட் ஜான் டேனியல் மகன் அந்தோணி ராஜ் (24) என்பது தெரியவந்தது. பின்னர் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர் அவர்களிடமிருந்து 2 அரிவாள், 2 வாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 17ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:40:10 PM (IST)

டிச.19ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் : மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:24:42 PM (IST)

கார்த்திகை 5வது சோம வாரம்: தூத்துக்குடி சிவன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:06:23 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
திங்கள் 15, டிசம்பர் 2025 4:04:38 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : 387 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 15, டிசம்பர் 2025 3:43:10 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி வீரர்கள் விளையாட வாய்ப்பு: டிஎன்சிஏ செயலர் பேச்சு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:32:52 PM (IST)










