» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர்-சென்னை நேரடி ரயில் இயக்க வேண்டும்: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

சனி 26, ஏப்ரல் 2025 9:16:06 AM (IST)

திருச்செந்தூர்-சென்னை இடையே நேரடி ரயில் இயக்க வேண்டும்; தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களுக்கும் நிறுத்தம் வழங்க வேண்டும் என்று கனிமொழி எம்பி கோரிக்கை விடுத்து உள்ளார்.

இது குறித்து அவர் தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளருக்கு அனுப்பி உள்ள மனுவில் "தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கன்னிக்கு செல்கின்றனர். குறிப்பாக செப்டம்பர் மாதம் நடைபெறும் திருவிழா மற்றும் மே மாத கோடை விடுமுறையில் அதிகமானோர் செல்கின்றனர். இந்த பக்தர்களின் வசதிக்காக தூத்துக்குடி- வேளாங்கன்னி இடையே நேரடி வாராந்திர ரயில் இயக்க வேண்டும். தூத்துக்குடி- புதுச்சேரி இடையே எந்த ரயில் வசதியும் இல்லாததால் இந்த ரயிலை புதுச்சேரி வரை நீட்டிக்க முடியும்.

திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு திருச்செந்தூர்- சென்னை இடையே நெல்லை, மதுரை, திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டி வழியாக புதிய நேரடி ரயில் இயக்க வேண்டும். திருச்சி - காரைக்குடி, காரைக்குடி - விருதுநகர், விருதுநகர் - காரைக்குடி, காரைக்குடி- திருச்சி ரயில்களை ஒருங்கிணைத்து தூத்துக்குடி- திருச்சி இடையே இன்டர்சிட்டி ரயிலாக தினமும் இயக்க வேண்டும்.

தூத்துக்குடி - பாலக்காடு - தூத்துக்குடி பாலருவி விரைவு ரயிலில் ஏசி பெட்டி இல்லாதது பெரும் குறையாக உள்ளது. எனவே, 2 பொது பெட்டிகளை குறைத்துவிட்டு ஒரு மூன்றடுக்கு ஏசி பெட்டியையும், ஒரு இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டியையும் உடனடியாக இணைக்க வேண்டும். அனைத்து ரயில்களுக்கும் தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும். திருச்செந்தூர் ரயில் நிலையத்தை பயணிகள் தேவைக்கு ஏற்ப மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கனிமொழி எம்.பி கூறி உள்ளார்.


மக்கள் கருத்து

முட்டால்Apr 26, 2025 - 09:07:47 PM | Posted IP 104.2*****

மக்களுக்காக உருப்படியாக செய்யமாட்டார்கள், அவங்க குடும்பத்துக்கு தான் எல்லாம் செய்வார்கள். நாம தான் ஓட்டு போட்டு வளர்த்து விட்டு பிச்சைக்காரர்கள் மாதிரி நிற்க வேண்டிய நிலைமை தான்

IndianApr 26, 2025 - 09:45:01 AM | Posted IP 104.2*****

What about another train to Chennai in addition to the existing one?.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory