» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து இந்து மகா சபா கண்டன ஆர்ப்பாட்டம்
வெள்ளி 25, ஏப்ரல் 2025 8:47:24 PM (IST)

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து நாசரேத்தில் இந்து மகா சபா சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தெற்கு காஷ்மீரின் சுற்றுலாத்தலமான பஹல்காமில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து நாசரேத்தில் இந்து மகா சபா சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் சுந்தர் வேல் தலைமை வகித்தார்.
மாநில செயலாளர். சேர்மத்துரை முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ராம்குமார்வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளர்களாக சிவசேனா மாநில அமைப்பாளர் சசிகுமார் தூத்துக்குடி இந்து வியாபாரிகள் சங்கம்செயலாளர் ஆறுமுகம் கலந்து கொண்டனர்.
மாநில வர்த்தக பிரிவு தலைவர், சக்திகுமார், மாநில இளைஞரணி செயலாளர் ராஜகோபால், சிவசேனா மாவட்டச் செயலாளர் சக்திவேல் மாவட்டத் துணைத் தலைவர்மாரிமுத்து, பவன் மாவட்டச் செயலாளர், வாகன ஓட்டுநர் பிரிவு மாவட்டசெயலாளர் புதியராஜ், ஆறுமுகநேரி நகர தலைவர்சேகர், நாசரேத் நகர தலைவர்செந்தில்வேல், ஒன்றிய செயலாளர் பாலமுருகன், ஆழ்வை ஒன்றிய தலைவர் பாலையா, ஆழ்வை ஒன்றிய செயலாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில துணைத் தலைவர் அண்ணாசாமி நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 17ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:40:10 PM (IST)

டிச.19ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் : மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:24:42 PM (IST)

கார்த்திகை 5வது சோம வாரம்: தூத்துக்குடி சிவன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:06:23 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
திங்கள் 15, டிசம்பர் 2025 4:04:38 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : 387 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 15, டிசம்பர் 2025 3:43:10 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி வீரர்கள் விளையாட வாய்ப்பு: டிஎன்சிஏ செயலர் பேச்சு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:32:52 PM (IST)










