» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மேலச்செவல் டிடிடிஏ பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டிடம்: ராபர்ட் புரூஸ் எம்.பி. திறந்து வைத்தார்.
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:03:21 PM (IST)

நெல்லை மாவட்டம் மேலச் செவல் டி.டி.டி.ஏ. பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகளை ராபர்ட் புரூஸ் எம்.பி. திறந்து வைத்தார்.
தென்னிந்திய திருச்சபை நெல்லைத் திருமண்டலத்தின் கீழ் இயங்கி வருகிற மேலச்செவல் டி.டி.டி.ஏ. உயர்நிலைப்பள்ளியில் கூடுதலாக கட்டப்பட்ட 3 புதிய வகுப்பறைகளின் திறப்புவிழா நடைபெற்றது. விழாவிற்கு நெல்லை திருமண்டல பேராயர் பர்னபாஸ் தலைமை தாங்கினார். மேலச்செவல் பேரூராட்சித் தலைவர் அன்னபூரணி ராஜன் முன்னிலை வகித்தார்.
விழாவிற்கு ஆரம்பமாக பள்ளித் தாளாளர் செல்வின் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் எம்.பி. கலந்து கொண்டு புதிய பள்ளிக் கட்டிடத்தைத் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். நெல்லை திருமண்டல உயர்நிலைப் பள்ளிகளின் மேலாளர் சுதர்சன், தென்மேற்கு சபைமன்றத் தலைவர் குருவானவர் அருள்ராஜ் பிச்சைமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நெல்லை பேராயர் பர்னபாஸ் இறைஆசி வழங்கினார்.
விழாவில் முன்னாள் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்ச்செல்வன், வட்டாரத்தலைவர் ரூபன் தேவதாஸ், வைகுண்டதாஸ், அம்பை தொகுதி பொறுப்பாளர் ராம்சிங். நல்லூர் பால்ராஜ், கொங்கந்தான்பாறை ரிச்சர்டு ஜேம்ஸ் பீட்டர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். நிறைவாக தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் நன்றியுரை ஆற்றினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 17ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:40:10 PM (IST)

டிச.19ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் : மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:24:42 PM (IST)

கார்த்திகை 5வது சோம வாரம்: தூத்துக்குடி சிவன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:06:23 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
திங்கள் 15, டிசம்பர் 2025 4:04:38 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : 387 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 15, டிசம்பர் 2025 3:43:10 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி வீரர்கள் விளையாட வாய்ப்பு: டிஎன்சிஏ செயலர் பேச்சு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:32:52 PM (IST)










