» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோஷ்டி மோதல்: 9 பேர் கைது
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 5:03:22 PM (IST)
திருச்செந்தூரில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக 9பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோகுல்நகரை சேர்ந்தவர் கண்ணன். இவர் கேஸ் சிலிண்டர் வினியோகம் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் சோனகன்விளை நீல்புரம் பகுதியில் சிலிண்டர் வினியோகம் செய்வதற்கு லோடு ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது நீல்புரத்தை சேர்ந்த ஜெபராஜ் என்ற கற்கண்டு (60) மோட்டார் சைக்கிளில் எதிரில் வந்துள்ளார்.
அப்போது லோடு ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் உரசியதாக கூறப்படுகிறது. இதில் கண்ணனை, ஜெபராஜ் அடித்தாராம். இது தொடர்பாக நேற்று இரவு கண்ணனுக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் நீல்புரம் ஜெபராஜ் வீட்டிற்குச் சென்று தட்டிகேட்டுள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கண்ணன் ஆதரவாளர்கள் ஜெபராஜை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜெபராஜ் திருச்செந்தூர் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். தந்தை ஜெபராஜ் தாக்கப்பட்டதை அறிந்த அவரது மகன் நவீன்(32) திருச்செந்தூருக்கு விரைந்து வந்துள்ளார். அங்கு அவரது தந்தை தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நவீன் ஆதரவாளர்களும், மற்றொரு தரப்பினரும் திருச்செந்தூர் யூனியன் அலுவலகம் முன்பு வைத்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
அப்போது இருதரப்பின ரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவரை மாறி மாறி அரிவாள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொண்டனர். இந்த சம்பவத்தில் நவீன், திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த கந்தவேல் (21), நட்டார் ஆனந்த் (20) ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இதற்கிடையே சம்பவ இடத்தில் தெருவோர ஓட்டலில் பிரைடு ரைஸ் வாங்க வந்த தூத்துக்குடி பூபால்ராயபுரம் விஜயபி ரகாஷ் (27) என்பவருக்கு முதுகு, கால் ஆகிய இடங்கள் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. காயமடைந்த அனைவருக்கும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பலத்த காயமடைந்த கந்தவேல், நட்டார் ஆனந்த் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஜெபராஜ், அவரது மகன் நவீன் திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் சி்கிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து ஏ.டி.எஸ்.பி. திபு, டி.எஸ்.பி. மகேஷ்குமார், தாலுகா இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் ஆகியோர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் தொடர்பாக குரும்பூர் மற்றும் திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 9பேரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 17ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:40:10 PM (IST)

டிச.19ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் : மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:24:42 PM (IST)

கார்த்திகை 5வது சோம வாரம்: தூத்துக்குடி சிவன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:06:23 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
திங்கள் 15, டிசம்பர் 2025 4:04:38 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : 387 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 15, டிசம்பர் 2025 3:43:10 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி வீரர்கள் விளையாட வாய்ப்பு: டிஎன்சிஏ செயலர் பேச்சு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:32:52 PM (IST)










