» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

என்எம்எம்எஸ் தேர்வில் வெற்றி: மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மேயர் வாழ்த்து!

செவ்வாய் 22, ஏப்ரல் 2025 3:30:06 PM (IST)



தூத்துக்குடியில் என்.எம்.எம்.எஸ்., தேர்வில் வெற்றி பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவர்களை மேயர் ஜெகன் பெரியசாமி பாராட்டினார். 

மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகைத் திட்டத்தின் (என்.எம்.எம்.எஸ்.) கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்ற தூத்துக்குடி ஜின் பேக்டரி சாலையில் உள்ள மாநகராட்சி  பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பரிசுகள் வழங்கி பாராட்டினார். 

நிகழ்ச்சியில் துணை ஆட்சியர் (பயிற்சி) சத்யா, மாவட்ட கல்வி அலுவலர் ஆண்ட்ரோ ரூபன், வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி, பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரகாஷ், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், பகுதி செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், மும்தாஜ், பொன்னப்பன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

G ho lkApr 24, 2025 - 10:42:03 AM | Posted IP 172.7*****

Dfgb

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education






Thoothukudi Business Directory