» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி, கோவில்பட்டியில் மினிபஸ்கள் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்!
திங்கள் 21, ஏப்ரல் 2025 4:38:27 PM (IST)
தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட 12 வழித்தடங்களுக்கும் மற்றும் 1 வழித்தட நீட்டிப்பு (Migration) வழித்தடத்திற்கும் சிற்றுந்துகளை இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "புதிதாக கண்டறியப்பட்ட தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட 11 புதிய வழித்தடங்களுக்கும், கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட 1 புதிய வழித்தடம் மற்றும் 1 வழித்தட நீட்டிப்பு (Migration) வழித்தடத்திற்கும் சிற்றுந்துகளை இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் புதிய மினிப்பேருந்துக்கான SCPA விண்ணப்பப்படிவத்தினை Parivahan மூலமாக விண்ணப்பித்து ஆன்லைனில் கட்டணம் ரூ.1500+100+1600/- செலுத்தி விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்து விலாசச்சான்றுக்கான ஆவணத்துடன் உரிய இணைப்புகளுடன் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சம்பந்தப்பட்ட வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களில் 23.04.2025-க்குள் நேரில் சமர்பிக்க தெரிவிக்கப்படுகிறது.
தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட வழித்தடங்களான ஸ்ரீராம் இன்ஜினியரிங் (மடத்தூர்) முதல் சுயம்புலிங்கம் அய்யனார் கோவில் (ஜோதி நகர்), சுயம்புலிங்கம் அய்யனார் கோவில் (ஜோதி நகர்) முதல் ஸ்ரீராம் இன்ஜினியரிங் (மடத்தூர்), கலெக்டர் ஆபிஸ் முதல் மொட்ட கோபுரம், மொட்ட கோபுரம் முதல் கலெக்டர் ஆபிஸ், பழைய பேருந்து நிலையம் முதல் டேவிஸ் புரம், டேவிஸ் புரம் முதல் பழைய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் முதல் வீரநாயக்கன் தட்டு, பிரம்மா டிரான்ஸ்போர்ட் டேவிஸ்புரம் முதல் பாலிடெக்னிக் காலேஜ், பாலிடெக்னிக் காலேஜ் முதல் பிரம்மா டிரான்ஸ்போர்ட் டேவிஸ்புரம், ஹார்டிகல்சர்ஸ் டிடி ஆபிஸ் முதல் பிரம்மா டிரான்ஸ்போர்ட் டேவிஸ்புரம், பிரம்மா டிரான்ஸ்போர்ட் டேவிஸ்புரம் முதல் ஹார்டிகல்சர்ஸ் டிடி ஆபிஸ் ஆகிய 11 வழித்தடங்களுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும், கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட வழித்தடங்களான சிந்தலைக்கரை முதல் ஈராட்சி, வழித்தட நீட்டிப்பு (Migration) வழித்தடம் செட்டிக்குறிச்சி முதல் கயத்தாறு பேருந்து நிலையம் வரை ஆகிய 2 வழித்தடங்களுக்கும் பின்வரும் படிவம் மற்றம் ஆவணங்கள் SCPA Form with fees of Rs. 1500+100+600/-, Address evidence, Road worthy certificate from A.E/D.E. Highways, Tentative timings, Route –Map/Sketch, Solvency Certificate ஆகியவற்றுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
முத்துராஜ் சீனிவாசன் நகர் கோவில்பட்டிApr 24, 2025 - 04:52:09 PM | Posted IP 104.2*****
கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் திட்டங்களும் இந்த வழித்தடத்தில் இதை ஏற்பாடு செய்யலாம் அப்போதுதான் ஆட்டோக்காரர்கள் செய்யும் அநியாயத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம் கோவில்பட்டி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு ஆட்டோ 250 ரூபாய் கேட்கிறார்கள் இதைக் காவல்துறையும் கண்டு கொள்வதில்லை நன்றி .
சகாயராஜ்Apr 23, 2025 - 01:24:33 AM | Posted IP 172.7*****
மக்களுக்கு செய்தி தெரிவிக்க வேண்டும் என்றால் பதினைந்து நாட்கள் முன்பு தெரிவிக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் மற்றும் பஸ் உரிமையாளர்கள் சங்கம் பேசி முடிவு செய்த பிறகு செய்தி வெளியிட்டு கண்துடைப்பு நாடகம் நடத்துகிறது
Ramar Brayantnagar tuticorinApr 22, 2025 - 10:07:21 PM | Posted IP 172.7*****
மினி பஸ்களுக்கு தனி வழித்தட எண் வழங்க வேண்டும்
N.KARPAGAVALLIApr 22, 2025 - 06:10:44 PM | Posted IP 104.2*****
வணக்கம் பேருந்து வழித்தடங்கள் நீடித்தது அருமை அதேபோல் புதிய பேருந்து நிலையம் முதல் மீள விட்டான் வரை இடைப்பட்ட நகர்களுக்கு மினி பேருந்து வசதி இல்லை. வெகு தூரம் நடந்த பின்பே மெயின் தெருவை பிடிக்க வேண்டி உள்ளது முன்பு ஊருக்குள் வரும் மினி பேருந்துகள் வழக்கம் போல் வந்தாலே சிரமம் என்று மக்கள் பயணிப்பர் கொரோனா பாதிப்பு மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக மினி பேருந்து நிறுத்தப்பட்டு விட்டது மிகவும் சிரமமாக உள்ளது குறிப்பாக தேவர்கலனி விஸ்வபுரம் முத்தம்மாள் காலனி நேதாஜி நகர் ஊருக்குள் செல்ல எழுவதில்லை இதற்கும் ஏதும் வழி செய்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்
MAKKALApr 22, 2025 - 12:57:07 PM | Posted IP 172.7*****
TUTICORIN SIVA JOTHI NAGAR, SIVA SHANTHI NAGAR, MUTHU KRISHNA PURAM BUS VIDAVUM
வீரப்பெருமாள்Apr 22, 2025 - 12:52:16 PM | Posted IP 172.7*****
.9487820240
7358832240
GOPALAKRISHNANApr 22, 2025 - 10:44:50 AM | Posted IP 172.7*****
நல்ல விஷயம்தான் ஆனால் தற்பொழுது கிராமங்களில் இரு சக்கர வாகனங்கள் வீட்டிற்கு இரண்டு அல்லது மூன்று சர்வசாதாரணமாக உள்ளது. லாபத்தில் இயக்குவது சற்று சிரமமே நகரங்களுக்கு உள்ளே சிற்றுந்து இயக்கம் தேவை
சண்முகம்Apr 22, 2025 - 08:53:35 AM | Posted IP 172.7*****
அரசு பேரூர்தி / தனியார் பயணியர் பேரூர்தி/ மினி பஸ் எதுவாகினும் விளம்பரம் செய்ய தடை மற்றும் வாகன எண் புறப்படும் இடம் வந்துசேறும் இடம் நாள் தூரம் கட்டணம் செலுத்தும் முறை ரொக்கம் / மின்னனு இ பரிவர்த்தனை அடங்கிய மின்னணு பயணச்சீட்டு- இ டிக்கெட் மட்டுமே வழங்க வேண்டும் . மேலும் பஸ்ஸில் வெளியிலும் உள்ளேயும் குறைந்த பட்ச கட்டணம் தொலைவு அதற்கு மேல் ஒவ்வொரு கிலோமீட்டருக்கான கூடுதல் கட்டணம் கட்டாயமாக எழுத்துப்பூர்வமாக விளம்பரம் இருக்க வேண்டும்.இல்லையெனில் மோசடியாக கணக்கில காட்டாத பயணச்சீட்டு கட்டணக்கொள்ளையை தடுக்க முடியாது.
இதனை செயல்படுத்தினால் தான் தொழில் நிறுவனங்களை பணிசெயல் போக்குவரத்திற்காக தொழிலாளர் நலத்துறை E Official Expensive Card திட்டத்தை செயற்படுத்தி கணக்கில காட்டாத போலி செலவினங்களை கட்டுப்படுத்த முடியும்.
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி நகர போக்குவரத்து பிரிவு காவல் அலுவலகத்தில் எஸ்பி ஆய்வு!
திங்கள் 15, டிசம்பர் 2025 9:18:01 PM (IST)

ஆயுதம் வைத்திருந்தவர்களை மடக்கி பிடித்து கைது செய்த போலீசாருக்கு எஸ்பி பாராட்டு!
திங்கள் 15, டிசம்பர் 2025 9:11:37 PM (IST)

கொலை வழக்கில் 2பேருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 8:40:47 PM (IST)

போலி பங்குச்சந்தை முதலீடு தொடர்பான மோசடி : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 8:35:00 PM (IST)

பாஜக சார்பில் சிறப்பு தீவிர திருத்தம் பயிலரங்கம்
திங்கள் 15, டிசம்பர் 2025 8:32:31 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 17ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:40:10 PM (IST)











AnbuApr 24, 2025 - 07:04:58 PM | Posted IP 162.1*****