» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 14½ பவுன் நகை திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:35:54 AM (IST)
தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 14½ பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி கான்வென்ட் சாலையைச் சேர்ந்தவர் நசரேன் மகன் ஜாக்சன் (65). இவர் குடும்பத்தினருடன் ஈஸ்டர் பண்டிகை பிரார்த்தனைக்காக தேவாலயத்துக்கு நள்ளிரவு சென்றுவிட்டு, நேற்று அதிகாலை வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டின் முன்பக்கம் கதவை உடைக்கப்பட்டு கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த சுமார் 14½ பவுன் நகைகள் திருடு போயிருந்தது. இதுகுறித்து ஜாக்சன்அளித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 17ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:40:10 PM (IST)

டிச.19ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் : மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:24:42 PM (IST)

கார்த்திகை 5வது சோம வாரம்: தூத்துக்குடி சிவன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:06:23 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
திங்கள் 15, டிசம்பர் 2025 4:04:38 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : 387 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 15, டிசம்பர் 2025 3:43:10 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி வீரர்கள் விளையாட வாய்ப்பு: டிஎன்சிஏ செயலர் பேச்சு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:32:52 PM (IST)










