» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மத்திய அரசின் தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர்கள் நியமனம்
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 3:52:57 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தின் மத்திய அரசு கூடுதல் வழக்கறிர்களாக இசக்கிலட்சுமி, மற்றும் என்.சுரேஷ்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை மூத்த வழக்கறிஞர் மதாப் சரன் புருஷ்டி தூத்துக்குடி மாவட்டத்தின் மத்திய அரசு வழக்கறிஞரையும், மாவட்ட மத்திய அரசு கூடுதல் வழக்கறிஞர்களையும் நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி தூத்துக்குடி மாவட்ட மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞராக தூத்துக்குடி மட்டக்கடை சேதுராஜா தெருவை சேர்ந்த பெண் வழக்கறிஞர் இ. இசக்கி லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞர் இசக்கி லட்சுமி மாநகர் மாவட்ட இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளராகவும், இவரது கணவர் தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தூத்துக்குடி மாவட்டத்திற்கான மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞராக பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் என்.சுரேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை மூத்த வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சுதேசி திருவிழா டிச. 26இல் தொடக்கம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 7:32:18 AM (IST)

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 7:28:04 AM (IST)

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)










