» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நெல்லை மாவட்ட முதல் பெண் தீயணைப்பு அதிகாரி பதவி ஏற்பு: அலுவலர்கள், வீரர்கள் வாழ்த்து

புதன் 19, மார்ச் 2025 8:33:23 AM (IST)

நெல்லை மாவட்ட முதல் பெண் தீயணைப்பு அலுவலராக பானுபிரியா பதவி ஏற்றுக் கொண்டார். 

நெல்லை மாவட்ட தீயணைப்பு அலுவலராக இருந்த வினோத் திருச்சி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தென்காசி மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுபிரியா நெல்லை மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டார். இதையடுத்து பானுபிரியா நேற்று பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு தீயணைப்பு நிலைய அலுவலர்கள், வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பானுபிரியா, விருதுநகர் மாவட்டம் சிவகாசி பொறியியல் கல்லூரியில் பி.இ. இளநிலை பட்டப்படிப்பும், நெல்லை மருதகுளம் பொறியியல் கல்லூரியில் எம்.இ. முதுநிலை பட்டப்படிப்பும் படித்து உள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று தீயணைப்பு துறை அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். சென்னையில் பயிற்சி முடித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து தென்காசியில் பணிபுரிந்த நிலையில் நெல்லைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இவர் சமீபத்தில் நடந்த குற்றாலம் வெள்ளப்பெருக்கின்போது வெள்ளத்தில் சிக்கியவர்களை துரிதமாக மீட்டது உள்ளிட்ட பல்வேறு சிறப்பான பணியில் களத்தில் இறங்கி உள்ளார். மேலும் இவர் நெல்லை மாவட்டத்தின் முதல் பெண் தீயணைப்பு மாவட்ட அலுவலர் என்ற பெருமையை பெறுகிறார்.


மக்கள் கருத்து

SRINIVASANMar 19, 2025 - 11:15:55 AM | Posted IP 104.2*****

வாழ்த்துக்கள். உங்கள் பதவியில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





CSC Computer Education


Arputham Hospital

New Shape Tailors




Thoothukudi Business Directory