» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண் குழந்தைகளைக் காப்போம் குறும்பட போட்டி: ஏப்.5 வரை பதிவேற்றம் செய்யலாம்!
செவ்வாய் 18, மார்ச் 2025 5:44:41 PM (IST)
பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் குறும்பட போட்டிகளில் பங்குபெறலாம் என மாவட்ட ஆட்சியர் க. இளம்கபவத் தெரிவித்துள்ளார்.
"பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” (Beti Bachao Beti Padhao) திட்டத்தின் கீழ் குழந்தை திருமணத் தடுப்பு, இளம் வயது கர்ப்பம், இணைய மிரட்டல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் ஆகியவற்றை மைய பொருளாக கொண்டு பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படம் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் பொது மக்கள், பள்ளி (ம) கல்லூரி மாணவ மாணவிகள் என எந்த வயதினரும் விண்ணப்பிக்கலாம். ஒரு விண்ணப்பதாரர் அதிகபட்சம் 3 குறும்படம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர் தனது சொந்த குறும்படங்களை மட்டுமே அனுப்ப வேண்டும்.
குறும்படத்தின் நீளம் அதிகபட்சம் 7 நிமிடத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் விண்ணப்பங்கள் https://lnxstgweb.tn.gov.in/tuty/sfc2024/ என்ற இணையதளத்தில் 28.02.2025-க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டது. தற்போது விண்ணப்பதாரர்கள் தங்களின் குறும்படம் தொகுப்பை 14.03.2025 தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் சிறந்த குறும்படத்திற்கு முதல் பரிசாக ரூ. 25,000/- இரண்டாம் பரிசாக ரூ. 15,000/- மூன்றாம் பரிசாக ரூ.10,000/- வழங்கப்படுகின்றது.
தற்போது விண்ணப்பிப்பதற்கான நாள் முடிவுற்றதைத்தொடர்ந்து, ஏற்கனவே விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களின் குறும்பட தொகுப்பை இணையதளத்தில் 05.04.2025-க்குள் காலதாமதம் ஏதுமின்றி பதிவேற்றம் (Upload) செய்யுமாறும் குறும்படத்தின் கோப்புகளை சிடி டிரைவ் -ல் பதிவு செய்து மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி என்ற விலாசத்தில் நேரடியாகவோ அல்லது தபாலிலோ சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு 0461-2337977 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காடல்குடி காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு!
வியாழன் 13, நவம்பர் 2025 9:09:28 PM (IST)

தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவரை கைது செய்ய எதிர்ப்பு: போலீசார் - வழக்கறிஞர்கள் வாக்குவாதம்!
வியாழன் 13, நவம்பர் 2025 8:21:43 PM (IST)

மாப்பிள்ளையூரணியில் ஆயுர்வேத மருத்துவ முகாம்!
வியாழன் 13, நவம்பர் 2025 8:10:20 PM (IST)

தசரா திருவிழா, கந்தசஷ்டி திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய ஆய்வாளர்களுக்கு எஸ்பி பாராட்டு!
வியாழன் 13, நவம்பர் 2025 8:04:12 PM (IST)

ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை அறிமுக விழா!
வியாழன் 13, நவம்பர் 2025 5:51:24 PM (IST)

நவ.15ல் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல ஊழியர் பிரதிநிதிகள் தேர்தல்: வாக்கு சேகரிக்கும் பணி தீவிரம்!!
வியாழன் 13, நவம்பர் 2025 5:47:23 PM (IST)









NAAN THAANMar 19, 2025 - 04:52:40 PM | Posted IP 162.1*****