» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி டாஸ்மாக் மதுபான குடோனில் சந்தேக லாரிகள்: விசாரணை நடத்த பாஜக கோரிக்கை!
திங்கள் 17, மார்ச் 2025 4:08:03 PM (IST)

தூத்துக்குடியில் டாஸ்மாக் மதுபான குடோனில் நடைபெறும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சித்ராங்கதன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் நிறுவன மாவட்ட அலுவலகத்தின் குடோன் அருகே கடந்த கடந்த நான்கு நாட்களாக மதுபானம் ஏற்றிவந்துள்ள லாரிகள், உரிய பில் இல்லாமல் நின்று கொண்டிருப்பதாக தகவல்கள் வருகிறது.
சமீபத்தில், அமலாக்கத்துறை டாஸ்மாக் மதுபானம் தொடர்பாக ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக தெரிவித்த நிலையில் மதுபானங்களை ஏற்றிய நிலையில் லாரிகள் அணிவகுத்து நிற்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த சம்பவம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் தமிழக அரசிற்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பதால், அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து, முறைகேடு ஏதும் நடைபெற்றுள்ளதா என்பதை உடனடியாக தீவிர விசாரணை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் டாஸ்மாக் ஊழியர்களின் செயல்பாடுகளை கண்காணித்து, எந்தவொரு சட்டவிரோத செயல்களும் நடைபெறாதவாறு உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 14½ பவுன் நகை திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:35:54 AM (IST)

பைக் மீது கார் மோதி விபத்து: வாலிபர் பலி!
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:32:04 AM (IST)

தூத்துக்குடியில் மீனவர் வெட்டிக் கொலை: 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:14:32 AM (IST)

டோல்கேட்டை சேதப்படுத்தி ஊழியர்கள் மீது தாக்குதல் : தூத்துக்குடியில் பரபரப்பு
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:09:20 AM (IST)

தூத்துக்குடி 1வது ரயில்வே கேட் ஏப்.22 முதல் 26வரை மூடல் - தெற்கு ரயில்வே தகவல்
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 8:57:22 PM (IST)

அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் த.வெ.க. கட்சி இளைஞர்கள் திமுகவில் ஐக்கியம்!
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 8:54:33 PM (IST)

முட்டாள்Mar 17, 2025 - 06:12:10 PM | Posted IP 104.2*****