» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி விமான நிலையத்தில் பனிமய மாதா ஆலய ஓவியம் - ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 17, மார்ச் 2025 3:31:54 PM (IST)

தூத்துக்குடி விமான நிலையத்தில் பனிமய மாதா ஆலயம் உள்ளிட்ட மிக முக்கியமான அடையாளங்களை பதிவு செய்திட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அன்னை பரதர் நல தலைமைச் சங்கம் தலைவர் S.சேவியர் வாஸ் ஆட்சியரிடம் அளித்த மனு "தூத்துக்குடி விமான நிலைய அமைப்பு மற்றும் சுவர்களில் வரைந்து வைக்கப்பட்டுள்ள ஓவியங்கள் குறித்த காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றது. அதில் தூத்துக்குடியின் அடையாளங்கள் காட்டப்படும் போது விடுதலைவீரர் கட்டபொம்மன், அவரது பாஞ்சாலங்குறிச்சி கோட்டை மற்றும் திருச்செந்தூர் முருகப் பெருமான் கோயில் ஆகியவை இடம் பெற்றிருப்பதைக் காட்டுகிறார்கள். மகிழ்ச்சி வரவேற்கிறோம்.
ஆனால் தூத்துக்குடி என்றாலே அதன் முக்கிய அடையாளங்களில் தலையானதாக, எல்லா மத மக்களாலும் வழிபடப்படுகின்ற பேராலயமாகத் திகழும் தூய பனிமய அன்னை பேராலயம் காட்டப்படவில்லை. விடுதலைப் போராட்ட வீரராக ஒன்றிய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அரசு சார் ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள எம் குல மன்னர் தேர்மாறன், ஐந்து முறை நகர்மன்றத் தலைவராக அமர்ந்து பணி செய்து தூத்துக்குடி மக்களுக்குத் தூய நீர் குடிக்கத் தந்த கோமான் குருஸ் பர்னாந்தீஸ் போன்ற தலைவர்களின் படங்கள் அதில் இடம் பெற்றிருப்பதாகத் தெரியவில்லை.
மண்ணின் உண்மை அடையாளங்களை மறுதலிக்கும் இச்செயல் தூத்துக்குடி மாநகர மக்களை குறிப்பாக இம்மண்ணின் ஆதி குடி மக்களான இம் மண்ணில் பெரும்பான்மையாக வாழும் பரத குலச் சமுதாய மக்களை மிகுந்த அதிர்ச்சிக்கும், மன வேதனைக்கும் உள்ளாக்கி வருகின்றது. ஆகவே தூத்துக்குடியின் மிக முக்கியமான அடையாளங்களை விமான நிலையத்தில் பதிந்திட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இது போல் தூத்துக்குடி விமான நிலைய இயக்குநரிடமும் மனு அளித்தனர். இதில், சங்கத்தின் பொதுச் செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் காஸ்ட்ரோ, அவைத்தலைவர் -ஞாயம் ரொமால்ட், துணைத் தலைவர் ஹாட்லி, செயலாளர் ராஜா போஸ் ரீகன், நிர்வாக செயலாளர் ஆர்தர் மச்சாது, செயற்குழு உறுப்பினர்கள் பெப்பின், முறாயிஸ் மற்றும் ஷெரான் ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
RajeshMar 17, 2025 - 11:37:07 PM | Posted IP 162.1*****
Another train service is needed between Chennai and Tuticorin.
RajeshMar 17, 2025 - 11:35:31 PM | Posted IP 162.1*****
Another train service is needed between Chennai and Tuticorin
UmajiMar 17, 2025 - 11:35:11 PM | Posted IP 172.7*****
Another train service is needed between Chennai and Tuticorin.
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 14½ பவுன் நகை திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:35:54 AM (IST)

பைக் மீது கார் மோதி விபத்து: வாலிபர் பலி!
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:32:04 AM (IST)

தூத்துக்குடியில் மீனவர் வெட்டிக் கொலை: 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:14:32 AM (IST)

டோல்கேட்டை சேதப்படுத்தி ஊழியர்கள் மீது தாக்குதல் : தூத்துக்குடியில் பரபரப்பு
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:09:20 AM (IST)

தூத்துக்குடி 1வது ரயில்வே கேட் ஏப்.22 முதல் 26வரை மூடல் - தெற்கு ரயில்வே தகவல்
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 8:57:22 PM (IST)

அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் த.வெ.க. கட்சி இளைஞர்கள் திமுகவில் ஐக்கியம்!
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 8:54:33 PM (IST)

UmajiMar 17, 2025 - 11:37:25 PM | Posted IP 104.2*****