» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நல்லகண்ணுவுடன் மகாராஷ்டிரா ஆளுநர் சந்திப்பு

சனி 15, பிப்ரவரி 2025 3:07:06 PM (IST)



சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணுவை மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். 

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், மக்கள் நலனுக்காக தன் வாழ்நாளை அற்பணித்தவரும், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மண்ணை பூர்வீகமாக கொண்டவருமான நல்லகண்ணுவை மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது, பாஜக சட்டமன்றகுழு தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொதுச் செயலாளர் வினோஜ் செல்வம், திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவர் முத்து பலவேசம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஆர்.சித்ராங்கதன் ஆகியோர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education



Arputham Hospital




Thoothukudi Business Directory