» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண் குழந்தைகளைக் காப்போம் குறும்பட போட்டி : ஆட்சியர் க. இளம்கபவத் தகவல்!
சனி 15, பிப்ரவரி 2025 8:47:50 AM (IST)
"பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் குறும்பட போட்டியில் பங்கேற்க இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் க. இளம்கபவத் தெரிவித்துள்ளார்.
‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்”( Beti Bachao Veti Padhao) திட்டம் பெண் குழந்தைகளின் பாலின சமநிலையை மேம்படுத்திடவும், பெண் குழந்தைகள் கல்வி கற்பதை உறுதி செய்திடவும் இந்திய அரசால் 2015 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட திட்டமாகும். மேலும் இத்திட்டத்தின் மூலம் பாலின பாகுபாட்டை நீக்கிடவும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்ட அளவில் குறும்பட போட்டிகள் நடைபெற உள்ளது.மேற்படி குறும்படத்தின் தலைப்பு குழந்தை திருமணத் தடுப்பு, இளம் வயது காப்பம், இணைய மிரட்டல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் , ஆகியவற்றை மைய பொருளாக கொண்டு பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படம் எடுப்பவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் எந்த வயதினரும் விண்ணப்பிக்கலாம் ஒரு விண்ணப்பதாரர் அதிகபட்சம் 3 குறும்படம் சமர்ப்பிக்கலாம் விண்ணப்பதாரர் தனது சொந்த குறும்படங்களை மட்டுமே அனுப்ப வேண்டும்.
குறும்படத்தில் நீளம் அதிகபட்சம் 7 நிமிடத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும் . விண்ணப்பங்கள் https://lnxstgweb.tn.gov.in/tuty/sfc2024/ இணையதளத்தில்- 28.02.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் குறும்படம் தொகுப்பை 14.03.2025 தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். சிறந்த குறும்படத்திற்கு முதல் பரிசாக ரூ. 25000/- இராண்டாம் பரிசாக ரூ. 15000/- மூன்றாவது பரிசாக ரூ.10000/- வழங்கபடுகின்றது.
குறும்படத்தின் கோப்புகளை சிடி டிரைவ் -ல் பதிவு செய்து மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி என்ற விலாசத்தில் நேரடியாகவோ அல்லது தபாலிலோ சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள 0461-2337977 என்ற எண்ணில் தொடர்புக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










