» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் அலைக்கழிப்பு: பொதுமக்கள் குற்றச்சாட்டு!

சனி 15, பிப்ரவரி 2025 8:26:38 AM (IST)



கீழ ஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முறையான சிகிச்சையும், அடிப்படை வசதிகளும், நோயாளிகள் கனிவுடன் நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள கீழ ஈரால் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான பழனிச்சாமி என்பவரின் மனைவி மீனா(45). இவர் கடந்த 9 ஆண்டுகளாகவே சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அருகில் உள்ள கீழ ஈரால் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று அன்றாடம் மருந்து சாப்பிட்டு வந்துள்ளார். 

இந்த நிலையில் கடந்த 9-ம் தேதி உறவினரின் வீட்டு நிகழ்ச்சிக்காக கோயம்புத்தூருக்கு தனது குடும்பத்தினருடன் மீனா சென்றுள்ளார். அப்போது அங்கு அவருக்கு திடீரென கை, கால் வராமல் சிரமப்பட்டுள்ளார். ஒரு உறவினர்கள் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு மீனாவை அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில் அங்குள்ள மருத்துவர்கள் அவருக்கு பக்கவாதம் வருவதற்கான அறிகுறிகள் தெரிகிறது எனவும், மேல் சிகிச்சைக்காக ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர். 

ஆனால் மீனா, எங்களால் இங்கு பணம் செலவழித்து சிகிச்சை பெறுவதற்கு வசதி இல்லை எனக் கூறி தான் வழக்கமாக சிகிச்சை பெறும் கீழ ஈரால் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஸ்கேன் செய்து கொள்கிறேன் என்று கூறி தனியார் மருத்துவமனையில் உள்ள மருத்துவரிடம், அவர் சிகிச்சை பெற்ற சீட்டை வாங்கி வந்துள்ளார்.

பின்னர் தனது சொந்த ஊருக்கு வந்த மீனா கீழ ஈராலில் அமைந்துள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று கோயம்புத்தூரில் தனியார் மருத்துவர் கொடுத்த சீட்டை காண்பித்து தனக்கு கை, கால் சரியாக இல்லை.. பக்கவாதம் என்று ஸ்கேன் எடுக்க சொன்னார்கள்... ஸ்கேன் எடுப்பதற்கு எழுதித் தரும்படி பணியில் இருந்த பெண் மருத்துவர் ஷான் மாதுரி-யிடம் கேட்டுள்ளார். 

ஆனால் அந்தப் பெண் மருத்துவர் ஷான் மாதுரி மீனாவையும் பரிசோதித்துப் பார்க்காமல், அவர் கொண்டு வந்த மருத்துவச் சீட்டையும் பார்க்காமல், "இப்போ நல்லா தானே இருக்கு, அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.. சீரியஸாவா இருக்கு,இல்ல உங்களுக்கு கை, கால் இழுத்துட்டு கிடக்கா, என்று அநாகரிகமாக பேசி சிகிச்சை அளிக்காமலே அனுப்பி வைத்துள்ளார். இதனால் மனமுடைந்த மீனா கண்ணீருடன் தனது வீட்டுக்கு திரும்பியுள்ளார். 

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட பாஜக நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட நோயாளி மீனா மற்றும் அவரது குடும்பத்தினருடன் மருத்துவமனைக்கு வந்து, "ஒரு பெண் நோயாளிக்கு எப்படி சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிக்கலாம் என்று அங்கிருந்து தலைமை மருத்துவர் உமா செல்வியிடம், நோயாளிடம் மன தைரியமாக பேசிய நேற்றைய தினம் பணி மருத்துவர் ஷான் மாதுரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட நோயாளியும் மீனா அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். 

இதையடுத்து உடனடியாக தலைமை மருத்துவர் உமா செல்வி மீனாவை பரிசோதனை செய்து ஸ்கேன் மற்றும் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு செல்லும்படி பரிந்துரை கடிதம் வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி, இந்த கீழ ஈரால் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் கனிவுடன் நடத்தப்படுவதே இல்லை என்ற குற்றச்சாட்டை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறுகின்றனர். அவ்வாறு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும், மருத்துவர்கள் இருந்தும் நீண்ட நேரம் அலைக்கழிக்கப்படுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். 

அத்தோடு இங்கு நோயாளிகள் குடிப்பதற்கு குடிநீர் வசதி கூட இல்லாத மோசமான சூழ்நிலையில் அங்குள்ள செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் குடிநீர் நீங்களே கொண்டு வர வேண்டும் என்று நோயாளிகளை நிர்பந்திப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். எனவே, இந்த மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தகுந்த முறையான சிகிச்சையும், அடிப்படை வசதிகளும் அனைத்து மக்களுக்கும் கிடைக்க செய்வதையும், நோயாளிகள் கனிவுடன் நடத்தப்படுவதையும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory