» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கட்சி பாரபட்சமின்றி பணிகள் நடைபெறுகிறது : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 11:08:55 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கட்சி பாகுபாடின்றி பணிகள் நடைபெற்று வருவதாக சுகாதார பணிகள் ஆய்வு கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் மதுபாலன் முன்னிலையில் சுகாதார பணிகள் விரைவுப் படுத்தும் விதமாக அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் பேசுகையில்: "நமது மாநகராட்சி மக்கள் நலன் கருதி எல்லா பகுதியிலும் சுகாதாரத்தை பேணி வேண்டும். டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் காத்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மனிதருடைய ஆரோக்கியத்திலும் நமக்கு அக்கறை உண்டு என்பதை கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பல திட்டங்கள் ஆமை வேகத்தில் நடைபெற்றன. திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் மக்களுக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு பணிகளையும் எவ்வித தொய்வுமின்றி முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி அனைத்து பணிகளும் நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக, 60 வார்டுகளிலும், கட்சி பாகுபாடின்றி மக்கள் நலன் தான் முக்கியம் என்று பணியாற்றி வருகிறோம்.
எதிர்வரும் காலங்களில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மழைநீர் தேங்காமல் பசுமையான பகுதியாகவும், மாசு இல்லாத மாநகராகவும் உருவாக்கி காட்டுவதே எங்களது இலட்சியம். மற்ற கட்சியினரை போல் கடமைக்கு பணியாற்றாமல் கடமை உணர்வோடு பாரபட்சமின்றி பணியாற்றி வருகிறோம். தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் சிறந்த மாநகராட்சி தூத்துக்குடி என்ற நிலையை உருவாக்க அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்போடு பணியாற்றுகிறோம் என்றார். கூட்டத்தில் நகர்நல அலுவலர் அரவிந்த்ஜோதி, மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











SRINIVASANFeb 14, 2025 - 12:30:37 PM | Posted IP 162.1*****