» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலி

வெள்ளி 14, பிப்ரவரி 2025 7:58:49 AM (IST)

கயத்தாறு அருகே திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே ஆசூா் சவாலாப்பேரி கிராமத்திற்கு உள்பட்ட பகுதியில் கோழிக்கடை அருகே சுமாா் 65 வயது மதிக்கத்தக்க பெண் அடையாளம் தெரியாத வாகன மோதி இறந்து கிடப்பதாக, ஆசூா் சவாலாப்பேரி கிராம நிா்வாக அலுவலா் கலைச்செல்வி புகாா் அளித்தாா்.

புகாரின் பேரில் கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் அவர் யார் என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



Thoothukudi Business Directory