» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

யார் வந்தாலும் தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கட்டும்: விஜய் அரசியல் குறித்து பவன் கல்யாண் பேட்டி

வியாழன் 13, பிப்ரவரி 2025 8:50:00 PM (IST)



"நடிகர் விஜய் அரசியல் கட்சியை துவங்கிய போதே வரவேற்று உள்ளேன். தமிழ்நாட்டுக்கு நல்லது செய்ய யார் வந்தாலும் வரவேற்கிறேன்" என்று ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், இன்று சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவர் காவி உடையில் தனி விமானம் முலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இது சனாதனா யாத்திரை கிடையாது. நான்கரை ஆண்டுகளாக நினைத்துக் கொண்டிருந்தேன். 

இன்று அதனை நிறைவேற்றியுள்ளேன். நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியவுடன் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தேன். தமிழ்நாட்டுக்கும், நம்ம நாட்டிற்கும் நல்லது நடக்கட்டும். யார் வந்தாலும் நல்லது நடக்கட்டும் வரவேற்கிறேன் என்று கூறினார். இதைத்தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்த பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். இதைத் தொடர்ந்து அவர் கார் மூலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு புறப்பட்டுச் சென்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory