» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பைக் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் தாய் - மகன் படுகாயம்

வியாழன் 13, பிப்ரவரி 2025 8:42:03 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பைக் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் தாய் - மகன் படுகாயம் அடைந்தனர். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகே 4 வழிச்சாலையில் மேம்பாலம் அருகே தூத்துக்குடி துறைமுக சாலையிலிருந்து தூத்துக்குடி மாநகரக்குள் நுழைவதற்காக இருசக்கர வாகனத்தில் வந்த தாய் மற்றும் மகன் இருசக்கர வாகனத்தை திருப்பி உள்ளனர். இதை கவனிக்காமல் தூத்துக்குடி அருகே உள்ள வாகைகுளத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தின் மேல் மோதியது.

இதில் பேருந்தின் முன் பகுதியில் இருசக்கர வாகனம் சிக்கி தாய் மகன் கீழே விழுந்து பலத்த காயத்துடன் கீழே விழுந்து கிடந்த இருவரையும் அருகில் இருந்த போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் ஆட்டோவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விபத்தை ஏற்படுத்தி விட்டு  பேருந்தை ஓட்டி வந்த டிரைவர் பேருந்தில் இருந்து பயணிகளை அப்படியே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்

இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தென்பாகம் காவல்துறையினர்  பொதுமக்கள் உதவியுடன் பேருந்தை பின்னால் எடுத்து பேருந்தின் அடியில் சிக்கி இருந்த இருசக்கர வாகனத்தை மீட்டனர். மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய டிரைவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். விபத்து காரணமாக நான்கு வழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


மக்கள் கருத்து

SAKTHIFeb 14, 2025 - 12:35:19 PM | Posted IP 172.7*****

YES ஞானம் YOU ARE 100% CORRECT.

ஞானம்Feb 14, 2025 - 10:01:53 AM | Posted IP 172.7*****

இலவச பேருந்து திட்டம் ஒரு முட்டாள்தனம். அதற்கு 5 ரூபாய் குறைத்து அனைவருக்கும் நன்மை செய்திருக்கலாம்.

SivaSriFeb 13, 2025 - 09:32:45 PM | Posted IP 172.7*****

தனியார் பேருந்து டிக்கெட் அதிகம் வேண்டும் என்பதற்காக வண்டியை வேகமாக எடுக்கின்றனர்.இலவச பேருந்து அதிகம் இருப்பதால் தனியார் பேருந்துக்கு டிக்கெட் இல்லை.அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.இதனால் அந்த லைன் மற்ற பேருந்து வருவதற்குள் டிக்கெட் ஏற்றவேண்டும்.. அரசு பேருந்து கல்லூரி வாயிலில் நிற்காது.தனியார் பேருந்து நின்று ஏற்றி வரூகிறது.ஆகவே இலவசத்தை நிறுத்தினால் நன்றாக இருக்கும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital

CSC Computer Education



Thoothukudi Business Directory