» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் வியாபாரிகளுக்கு இடைஞ்சல்கள் : அமைச்சர் பி.கீதா ஜீவன் பேச்சு!

வியாழன் 13, பிப்ரவரி 2025 5:02:54 PM (IST)



தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் வியாபாரிகளுக்கு அடக்குமுறை இருந்தது. ஆனால் தற்போது இரவு 12 மணி வரை வியாபாரம் செய்ய திமுக அரசு அனுமதி அளித்துள்ளது என்று அமைச்சர் பி.கீதா ஜீவன் பேசினார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திட்டக்குளத்தில் தனியார் தினசரி சந்தை அமைப்பதற்கான கால்கோள் விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில் "பல்வேறு சிரமங்களுக்கு இடையே இந்த தனியார் தினசரி சந்தை தொடங்கப்படுகிறது. எப்போதுமே தொழில் பெருகுவதை நாம் வரவேற்க வேண்டும். தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் தொடங்கப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

தமிழகத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடு வந்துள்ளது. வியாபாரிகள் என்றால் இன்றைக்கு சில பெண்கள் திருமணம் செய்ய தயங்குகின்றனர். சனி, ஞாயிறு கூட விடுமுறை இல்லாமல் கடையில் இருப்பதால் தங்களை வெளியே அழைத்துச் செல்ல மாட்டார்கள் என்று கூறுகின்றனர். புரிதல் இல்லை என்பதால் சிலர் இந்த தனியார் சந்தையை புறக்கணிக்கின்றனர். ரிஸ்க் எடுக்கும்போது தான் ரஸ்க் சாப்பிட முடியும். சட்டப்படி அனைத்து அனுமதிகளையும் வாங்கிய பின்னர் தான் இந்த தனியார் சந்தை தொடங்கப்படுகிறது. 

விவரம் அறியாதவர்கள் யாரோ தூண்டுதலின் பேரில் பேசிக் கொண்டிருக்கலாம். நகராட்சி சந்தை சீரமைக்க இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. நகராட்சி நிர்வாகம் செய்த காரணத்தினால் தான் இந்த சந்தை தொடங்கியதாக கூட சொல்ல முடியும். வியாபாரப் போட்டி காரணமாக தொடங்க விடக்கூடாது என்று எல்லா இடத்திலும் சிறு தூண்டுதல் இருக்கும். தூத்துக்குடியில் இதே போன்று பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் சந்தை கட்டப்பட்டு ஐந்து ஆண்டுகளாக சண்டை திறக்கப்படாமல் இருந்தது. தற்போது திறந்தும் நடத்தப்படாமல் உள்ளது. போட்டி வியாபாரிகளால் தான் இது போன்ற இடைஞ்சல்கள் தரப்படுகிறது.

நல்ல முறையில் சாதுரியமாக பொறுமையாக இருந்து இந்த தனியார் சந்தையை தொடங்கியுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் வியாபாரிகளுக்கு பல்வேறு இடைஞ்சல்கள் கொடுக்கப்பட்டது. அப்போது இரவு ஒன்பது முப்பது மணிக்கு எல்லாம் கடைகளை அடக்கச் சொல்லி காவல்துறை வலியுறுத்துவது மட்டும் இன்றி பொருட்களை வெளிய எடுத்து போட்ட சம்பவங்களும் நடைபெற்றன. அதிமுக ஆட்சியில் வியாபாரிகளுக்கு அடக்குமுறை இருந்தது. திமுக ஆட்சியில் இரவு 12 மணி வரை வியாபாரம் செய்யலாம் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். வியாபாரிகளுக்கு இடைஞ்சல் செய்யக்கூடாது என்று முதல்வர் வாய்மொழி உத்தரவிட்டுள்ளார் என்றார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors



CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory