» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ்ப் பேரரசு கட்சியினர் கைது: வ.கௌதமன் கடும் கண்டனம்!

வியாழன் 13, பிப்ரவரி 2025 4:55:17 PM (IST)

கோவில்பட்டியில் உரிமை மீட்க போராடிய தமிழ்ப் பேரரசு கட்சியினரை கைது செய்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு கட்சியின் பொதுச் செயலாளர் வ.கௌதமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்..

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சட்டத்தை மீறி திறந்த தனியார் சந்தையை எதிர்த்து போராடிய தமிழ்ப் பேரரசு கட்சியை சேர்ந்த செ.சரவணன், மாநில வழக்கறிஞரணி செயலாளர்,கணேசன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர், இசக்கிமுத்து, மாவட்ட இளைஞரணி தலைவர், கோவிந்தராஜ், மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர், குமார், மாவட்ட பொருளாளர், லட்சுமணபாண்டியன், மாவட்ட வழக்கறிஞரணி செயலாளர் பாலமுருகன், கழுகுமலை இளைஞரணி செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் மூக்காண்டி, குருநாதன், ரமேஷ் மற்றும் சமூக ஆர்வலர்களை கைது செய்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாறாக சட்டத்தை மதிக்காமல் அதனை தூக்கி குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு நேர்மையற்றவர்களோடு இணைந்து அந்த திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்ட சபாநாயகர் திரு.அப்பாவு அவர்களுக்கும் அமைச்சர் திருமதி கீதா ஜீவன் அவர்களுக்கும் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பதவியும் அதிகாரமும் இருக்கிறது என்பதற்காக எத்தகைய அத்துமீறலுக்கும் துணிவோம் என்கிற இவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக பதவியிலிருந்து விலக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 

கைது செய்த தமிழ்ப் பேரரசு கட்சியினர் அனைவரையும் அரசு உடனே விடுவிக்க வேண்டும்.ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்பதனை சம்மந்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education

New Shape Tailors







Thoothukudi Business Directory