» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புதிய கல்வித் திட்டம் பழைய குலக்கல்வி முறையை நினைவு படுத்துகிறது : சபாநாயகர் அப்பாவு பேச்சு

வியாழன் 13, பிப்ரவரி 2025 4:46:28 PM (IST)



"மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்வித் திட்டம் பழைய ராஜாஜி குலக்கல்வி திட்டத்தை நினைவு படுத்துகிறது" என்று சபாநாயகர் அப்பாவு கூறினார். 

கோவில்பட்டியில் நடைபெற்ற தனியார் சந்தை கால்கோள் விழாவில் கலந்து கொண்டு பேசிய சபாநாயகர் அப்பாவு பேசுகையில், "விவசாயிகள் பயன்பெறும் வகையில் வியாபாரிகள் அவர்கள் கொண்டுவரும் பொருட்களை விற்பனை செய்து நியாயமான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு விவசாயிகளுக்கு என்ன தேவையோ அதை அனைத்தையும் செய்து வருகிறது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தான் பேருந்துகளில் இலவச பயணத்த திட்டத்தை கொண்டு வந்தவர் தமிழக முதல்வர், இன்றைக்கு வெளிநாடுகளில் வந்த மகளிர் கூட பஸ்களில் பயணித்து பாராட்டுகின்றனர் 

பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார், அவர் வழியில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கொண்டு வந்த காலை சிற்றுண்டி திட்டம் மூலமாக 20 லட்சம் மாணவர்கள் பயன்பட்டு பெற்று வருகின்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளுக்கு மேற்படிப்புக்காக புதுமைப்பெண் திட்டம் மூலமாக மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் ரூபாய் வழங்குகிறார். அதேபோன்று தமிழ் புதல்வன் மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது 

பிரதமர் நரேந்திர மோடி புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளார். அந்த கல்விக் கொள்கையின் அடிப்படையில் மூன்று ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பகளுக்கு தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சி பெறவில்லை என்றால் அந்த மாணவன் மேல்படிப்புக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். அவர்கள் வேலைக்கு தான் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வித் திட்டம் என்பது பழைய ராஜாஜி குலக்கல்வி திட்டத்தை நினைவு படுத்துகிறது. புதிய கல்வித் திட்டத்தை தமிழக அரசு ஒத்துக்கொள்ளவில்லை என்பதால் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு கல்விக்காக தரவேண்டிய நிதியை தரவில்லை. 

தற்போது பிஎம் ஸ்ரீ என்ற திட்டத்தை கொண்டுள்ளனர். அந்தத் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 16,000 பள்ளிகளை தேர்ந்தெடுக்கின்றனர். தமிழகத்தில் 500 முதல் 1000 பள்ளிக்கூடங்களை எடுத்துக் கொள்வார்கள். அவ்வாறு எடுக்கப்படும் பள்ளிகளில் தமிழை நிறுத்தி இந்தி, ஆங்கிலம் , சமஸ்கிருதம் என மும்மொழித் திட்டத்தை கொண்டு வருவார்கள். இதில் முதன்மையானது சமஸ்கிருதம் என்கின்றனர். இந்தியாவில் சமஸ்கிருதம் பேசுபவர்கள் எண்ணிக்கை குறைவுதான்.நமக்கு தெரியாத மந்திரங்களை ஓதுகின்றனர் அதுதான் சமஸ்கிருதம். மொத்தம் 50 ஆயிரம் பேர் தான் அதை பேசுகின்றனர். 

அதை நாம் படிக்க வேண்டும் என்று கூறுகின்றனர் .இந்தி தான் அதிகமாக பேசுவதால் அதுதான் தேசிய மொழி என்று நாடாளுமன்றத்தில் சொல்லியபோது, பேரறிஞர் அண்ணா காகம் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளது. ஆனால் மயில் எண்ணிக்கையில் குறைவாக உள்ளது. ஆனால் தேசிய பறவையாக மயில் தான் வைத்துள்ளமை தவிர காகத்தை வைக்கவில்லை என்றார். குஜராத் ஒரிசா மகாராஷ்டிரா கர்நாடகா போன்ற மாநிலங்களில் மாநில மொழிகள் அழிந்து அங்கு இந்தி தான் ஆதிக்கத்தில் உள்ளது. பழமையான மொழியான தமிழ் மொழி கனடா, சிங்கப்பூர், மொரிஷியஸ், மலேசியா, இலங்கையில் ஆட்சி மொழியாக உள்ளது.

இந்தியாவில் தோன்றிய தமிழ் மொழி வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. உலகில் தோன்றிய முதல் 3 மொழிகளில் இன்னும் அழியாமல் இருக்கக்கூடிய மொழி தமிழ் மொழி. தமிழ் மொழியில் தான் ஏராளமான இலக்கியங்கள் உள்ளன. இது அவர்களுடைய கண்ணை உறுத்துவதால் நம்முடைய பண்பாடு கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்றால் தமிழ் மொழியை ஒழித்து விட்டால் எல்லாம் செய்துவிடலாம் என்று எண்ணுகின்றனர். 

சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை விரும்பாத ஆளுநரும் இருக்கிறார். நமக்கு வருத்தமாக தன் இருக்கிறது என்ன செய்வது என்று தெரியவில்லை. இவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் எல்லோருக்கும் எல்லாம் கொடுக்க வேண்டும் என்று தான் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மகளிர்க்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் மகளிர் உரிமைத்தொகை வழங்கி வருகிறார். விடுபட்ட மகளிர்க்கும் மூன்று மாதங்களில் மகளிர் உரிமைத்துறை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்றத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors

CSC Computer Education



Arputham Hospital




Thoothukudi Business Directory