» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தைமாத பவுர்ணமி 108 திருவிளக்கு பூஜை
வியாழன் 13, பிப்ரவரி 2025 4:32:33 PM (IST)

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தை மாத பவுர்ணமியொட்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்தகோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆண்டுதோறும் இந்த கோவிலில் நடைபெறும் தசரா விழா சிறப்பு வாய்ந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
மேலும் இந்த கோவிலில் விஷேச தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்நிலையில் தை மாத பவுர்ணமியொட்டி நேற்று மாலை கோயிலில் 108 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதில் பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், செயல் அலுவலர் வள்ளிநாயகம், அறங்காவலர் குழு உறுப்பினர் கணேசன், வெங்கடேஸ்வரி ஹரி ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சிறுவன் ஓட்டி வந்த பைக் பறிமுதல் : ரூ.25ஆயிரம் அபராதம், பெற்றோர் மீது வழக்குபதிவு
சனி 22, மார்ச் 2025 5:20:13 PM (IST)

பருவம் தவறி பெய்த மழையால் பயிர்கள் பாதிப்பு : அரசு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
சனி 22, மார்ச் 2025 5:13:31 PM (IST)

திருமண்டல சுற்றுச்சூழல் துறை சார்பில் உலக தண்ணீர் தினம்!
சனி 22, மார்ச் 2025 5:04:35 PM (IST)

தூத்துக்குடியில் பாஜகவினர் வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம்
சனி 22, மார்ச் 2025 4:56:40 PM (IST)

மின்சார வாரியத்தில் 50,000 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் : பொறியாளர் சங்கம் வலியுறுத்தல்!
சனி 22, மார்ச் 2025 4:23:33 PM (IST)

தூத்துக்குடியில் கனமழையில் வீடு இடிந்து சேதம் : பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு
சனி 22, மார்ச் 2025 4:08:37 PM (IST)
